Published:Updated:

விட்டுக்கொடுப்பாரா ஓ.பி.எஸ்?- அக்னிபத் என்றால்?- +2-க்குப் பிறகு?-தங்கம் சரிவு ஏன்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 15
Listicle
Vikatan Highlights June 15

விட்டுக்கொடுப்பாரா ஓ.பி.எஸ்?- அக்னிபத் என்றால்?- +2-க்குப் பிறகு?-தங்கம் சரிவு ஏன்|விகடன் ஹைலைட்ஸ்


1
அதிமுக கூட்டம்

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை: எடப்பாடிக்கு விட்டுக்கொடுப்பாரா ஓ.பி.எஸ்?

அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுவருவதாக பல்வேறு காலகட்டங்களில் செய்திகள் வெளியான நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே அதிகாரபூர்வமாக அது குறித்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.

இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கு தடையாக இருக்கும் ஒரே நபர் ஓ.பி.எஸ் மட்டுமே. அவரை மடக்கிவிட்டால், அவரது ஆதரவாளர்களும் சத்தமில்லாமல் அடங்கி விடுவார்கள் எனக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி.

வரும் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு முன்னதாகவே ஒ.பி.எஸ்-ஸை இதற்கு சம்மதிக்க வைப்பதற்காக எடப்பாடி சில திட்டங்களை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஓ.பி.எஸ்-ஸைப் பொறுத்தவரை, தனது அரசியல் எதிர்காலத்தை விட தனது மகனும் எம்,பி.யுமான ரவீந்திரநாத்தின் எதிர்கால நலனையே அதிகம் சிந்திப்பதாக கூறப்படுகிறது. கூடவே சொந்த ஊரில் தனது இன்னொரு வாரிசுக்கான செல்வாக்கை நிலை நிறுத்த விரும்புகிறார்.

இதையெல்லாம் நன்கு அறிந்திருக்கும் எடப்பாடி, வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிட உங்கள் வாரிசுகளுக்கு கட்டாயம் 'சீட்' , கூடவே கட்சியிலும் ஏதாவது பதவி தர தயாராக இருப்பதாக கூறி, ஓ.பி.எஸ்-ஸை மடக்க திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவில் எடப்பாடியை ஒற்றைத் தலைமையாகத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தில் ஓ.பி.எஸ்-ஸும் கையெழுத்து போட வேண்டிய நிலையில், அவர் இதற்கு விட்டுக்கொடுப்பாரா...? இது தொடர்பான அதிமுக வட்டாரத்தின் முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


2
மல்லிகார்ஜுன் கார்கே

குடியரசுத் தலைவர் தேர்தல்: மோடி காட்டிய ஆர்வம்... காங்கிரஸ் சொன்ன பதில்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கான ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின், குறிப்பாக காங்கிரஸின் கருத்துகளைப் பிரதமர் மோடி அறிய விரும்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பா.ஜ.க சார்பில் ஜே.பி நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்ட பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
ராணுவ வீரர்கள் பற்றாக்குறை... திணறுகிறதா இந்திய ராணுவம்!?

ராணுவத்தில் வேலை வாய்ப்பு: அக்னிபத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன?!

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் ராணுவத்துக்காக 76.6 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தியா தனது ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராணுவத்தில் தேவையில்லா செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் செய்து வந்தது.

அதன்படி, அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் அக்னிபத் திட்டம் என்றால் என்ன..? அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா; கிடைக்காதா?

ஒரு பெற்றோருக்கு இன்ஜினீயரிங் கோர்ஸ் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் தான் பயம் வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் வேலை கிடைக்கும்.

இன்ஜினியரிங் இன்று நிறைய பேர் படிக்கிறார்கள். எல்லாருக்கும் சீட்டு கிடைத்து விடுகிறது. அதனால், இன்ஜினியரிங் ஒரு கேலிப் பொருளாக்கப்படுகிறது.

சமீபத்தில் கல்வி விகடன் நடத்திய '+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?' என வழிகாட்டி நிகழ்ச்சியில் பிரபல கல்வி ஆலோசகர்கள் அளித்த விளக்கங்கள், வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளிட்டவற்றைப் படிக்க க்ளிக் செய்க...


5
தங்கம் ( Image by Nawal Escape from Pixabay )

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை... காரணம் என்ன..?

தங்கத்தின் விலை தற்போது தினசரி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சில நாள்களில் உயர்ந்தும், சில நாள்களில் குறைந்தும் இருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.

தொடர்ந்து தங்கத்தின் விலை குறைவதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


6
படிக்காதவன்

படிக்காதவன்: சென்ட்டிமென்ட் - ஆக்ஷன் காம்போவில் கலக்கிய ரஜினி! 

1, நவம்பர் 1985 அன்று வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமாப் பயணத்தில் வசூலை வாரிக்குவித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களுள் ஒன்றாக அமைந்தது. திரைப்படங்களில் தன்னை அடித்தட்டு மக்களில் ஒருவனாக சித்திரித்துக் கொள்வது ரஜினியின் பாணிகளுள் ஒன்று. அவருடைய படங்களின் தலைப்புகள் கூட ‘படிக்காதவன்’, ‘வேலைக்காரன்’, ‘உழைப்பாளி, ‘ஊர்க்காவலன்’ என்பது போல் அமைந்திருக்கும். இது எம்.ஜி.ஆரின் ஃபார்முலா.

தமிழகத்திலுள்ள சினிமாப் பார்வையாளர்களின் பெரும்பாலான சதவிகிதம் அடித்தட்டு மக்கள் என்பதால் அவர்களுடன் தங்களை நெருக்கமாக சித்திரித்துக் கொள்ள சினிமா ஹீரோக்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இதற்காகத் திரையில் ரிக்ஷா இழுத்தார்கள்; கூலிக்காரனாக மாறினார்கள்; பணக்காரர்களால் ஏமாற்றப்பட்டு அதனால் கோபப்படுவர்களாக, துயரப்படுபவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். இவற்றில் கல்வி கற்காத நிலையும் ஒன்று. படிக்காதவன் நேர்மையாளனாக, நல்லவனாக இருப்பான். ஆனால் படித்த பணக்காரன் என்பவன் தீமைகளைச் செய்பவனாக இருப்பான். இப்படியான சித்திரிப்பு அடித்தட்டு மக்களுக்குப் பிடித்திருந்தது. இந்த ஹீரோக்களைத் தங்களில் ஒருவனாகப் பார்த்தார்கள்; சினிமாவில் வெற்றியடைய வைத்தார்கள்.

அதே வரிசையில் வந்த ரஜினியின்‘படிக்காதவன்’ திரைப்படம் குறித்த முழுமையான சுவாரஸ்யங்களைப் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism