Published:Updated:

இளையராஜா சர்ச்சை- எடப்பாடிக்கு டெல்லி 'வார்னிங்'-தமிழிசைக்கு அவமதிப்பா-தோனி பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 7
Listicle
Vikatan Highlights July 7

இளையராஜா சர்ச்சை- எடப்பாடிக்கு டெல்லி 'வார்னிங்'-தமிழிசைக்கு அவமதிப்பா-தோனி பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
மோடி - இளையராஜா

இளையராஜாவுக்கு எம்.பி பதவி... விமர்சனம் சரியா..?

ந்த நியமன எம்.பி பதவியெல்லாம் அவரது திறமைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை. மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஏக்கம், பிரிவு, துயரம், துள்ளல், துன்பம், சோகம் என மனித மனத்தின் அத்தனை உணர்வுகளையும் தனது இசையால் கடத்தியவர். 70 களின் பிள்ளை பிராயத்தினர் தொடங்கி இன்றைய 2கே கிட்ஸ்கள் வரையிலானவர்களும், அவரது பாடல்களோடுதான் நாட்களை நகர்த்துகிறார்கள். தொலைக்காட்சிகளின் காலைத்தென்றலில் தொடங்கி, பயணிக்கும் ஆட்டோ, பேருந்து, அலுவலக கணினிகள், கேண்டீன், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மேடைக் கச்சேரிகள், இரவு நேர கொடை விழாக்கள், கோயில் திருவிழாக்கள் என எல்லா இடங்களிலும், எல்லா தரப்பு மக்களிடத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது இசைஞானியின் இசைக்கோர்வையை பாடிய குரல்கள்.

மொழி, மாநிலம், நாடு தாண்டி, உலக இசை கலைஞர்களும், வல்லுநர்களும் வாயார பாராட்டும் கலைஞன்தான். அத்தகைய ஒரு திறமைசாலியை, இசை வித்தகரை இன்னும் மதிப்புமிக்க விருதுகளை வழங்கி ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அப்படியானவருக்கு, மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய புத்தகத்துக்கு எழுதிய முன்னுரைக்காகத்தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று எழுந்துள்ள விமர்சனங்கள், இளையராஜா குறித்த மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இது குறித்து காரசாரமான பதிவுகள்... பதிலடிகள்.

எதிர்ப்பு கருத்துகளை முன்வைப்பவர்கள், " தலித்துகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பா.ஜ.க. செய்யும் தந்திரம் இது. தலித் ஆளுமைகள் சிலருக்கு இதுபோன்ற பதவிகள், பட்டங்களை அறிவித்துவிட்டு, நாட்டின் பெருவாரியான தலித்துகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சமத்துவ நிலை போன்ற தளங்களில் அவர்களுக்கான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்காமல் செய்வதில் முனைப்புடன் காரியமாற்றுகிறது பா.ஜ.க அரசு.

தற்போது இளையராஜாவுக்கான எம்.பி நியமன அறிவிப்பில் கூட அவரை ' தலித்' எனக் குறிப்பிட்டு அவமதித்துள்ளது மோடி அரசு. முன்னர் ஒரு பத்திரிகை கட்டுரையில் தன்னை தலித் என அடையாளப்படுத்தி எழுதியதற்காக முனைவர் கே.ஏ.குணசேரன் மீது வழக்கு தொடுத்தவர் இளையராஜா. ஆனால், இன்று அதே அடையாளத்தை பா.ஜ.க சுமத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறார்..?" எனக் கேட்கிறார்கள்.

ஆனால், இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பெரும்பாலானோர் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் என்றும், தலித்துகளுக்கு உருகும் இவர்கள், தங்களது கட்சியில் எத்தனை வாய்ப்புகளையும் கவுரவங்களையும் வழங்கிவிட்டார்கள் என்றும் பதிலடிகள் கொடுக்கப்படுகின்றன.

"தலித்துகளுக்கு என்ன செய்து இருக்கிறோம் என்று திராவிட கட்சிகள் சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அதை எல்லாம் செய்ய முடியாது என்றால், இளையராஜா குறித்து விமர்சிக்க நமக்கு என்ன தகுதி இருக்கு? பா.ஜ.க -வை திருமா அளவிற்கு யாரும் எதிர்க்கவில்லை. அவருக்கான இடத்தை நாம் கொடுத்து இருக்கிறோமா?" எனக் கேள்வி எழுப்புகிறார் எவிடன்ஸ் கதிர்.

கூடவே இந்த விஷயத்தில், கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

" நடிப்புக்கென ஒரே குடும்பத்தில் நான்குபேர் பட்டங்களும் விருதுகளும் வாங்கியபோது இங்கே சிவாஜிகணேசனும் இளையராஜாவும் விருதுகளின் வாசனை இல்லாமல்தான் இருந்தார்கள் என்பதை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது" என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

இந்த நிலையில், இளையராஜா, பி.டி.உஷா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய பிரபலங்களுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியதில் அரசியல் பின்னணி உள்ளதா...? இது குறித்து தி.மு.க மற்றும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படும் விளக்கங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

"அது, எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த 'வார்னிங்' மெசேஜ் தான்..!" - பதைபதைக்கும் ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'நமது அம்மா'வின் வெளியீட்டாளருமான வடவள்ளி சந்திரசேகர் மீது வருமானவரித்துறை சோதனைகள் தடதடக்கின்றன. விருதுநகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய இடங்களிலும் சோதனை தொடர்கிறது. இரண்டாவது நாளாக தொடரும் இந்த ரெய்டால், அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி முகாமில் கலவர ரேகைகள் படர்ந்திருக்கின்றன.

இந்த நிலையில், இந்த ரெய்டு பின்னணியில், எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் டெல்லியின் சில கூட்டல் கழித்தல் கணக்குகள் இருப்பதாக பதைபதைக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அப்படி டெல்லி போடும் கணக்கு என்ன, ரெய்டுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவலைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
உதயநிதி

கழுகார் அப்டேட்ஸ்:  உதயநிதி நிகழ்ச்சியால் மோதிக்கொள்ளும் நிர்வாகிகள்..!  

செலவழிப்பது நாங்க... பெயர் வாங்குவது மாவட்டச் செயலாளர்களா?

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிவருகிறார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சிக்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்களே ஏற்று நடத்த வேண்டும் எனத் தலைமை சொல்லியிருக்க, சில மாவட்டச் செயலாளர்களோ ஒன்றியச் செயலாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நகர்ந்துவிட்டனர்.

ஏற்கெனவே உட்கட்சித் தேர்தல் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாலும், உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்வு என்பதாலும் வேறு வழியின்றி ஒன்றியச் செயலாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலிருந்து, பொற்கிழிக்கான தொகை வரை எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கொள்கிறார்களாம். ஆனால், நிகழ்ச்சி நடக்கும் நாளன்று மா.செ-க்கள் தாங்களே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுபோலக் காட்டிக்கொள்வதோடு, ஒன்றியச் செயலாளர்களை மேடைக்குப் பக்கத்திலேயே விடுவதில்லையாம். ‘செலவழிப்பது நாங்க... பெயர் வாங்குவது மாவட்டச் செயலாளர்களா?!’ என்று கடுப்பில் இருக்கிறார்கள் ஒன்றியச் செயலாளர்கள்.

இது தவிர, 'இது நான் கட்டிய அறிவாலயம்' - எகிறிய எம்.பி முதல் வைத்தியின் ‘ஸ்லீப்பர் செல்’வரை கழுகார் சொல்லும் மேலும் பல அப்டேட்ஸ்-களைப் படிக்க க்ளிக் செய்யவும்...


4
சிதம்பரம் கோயிலில் தமிழிசை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிப்பா...? ஆளுநர் தமிழிசை விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி உத்திர அபிஷேக தரிசன விழாவுக்குச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, தீட்சிதர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்தது என்ன என்பது தமிழிசை அளித்துள்ள விளக்கம், தீட்சிதர்களின் பதில் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...


5
கங்கை அமரன்

"விஜய் - அஜித் ஃபேமிலி யாருக்கும் தெரியாமல் துபாயில் சந்திப்பார்கள்..!" - கங்கை அமரன் பேட்டி

மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய புத்தகத்துக்கு இளையராஜாவின் அணிந்துரை தொடர்பான சர்ச்சை, கோபம் எல்லாம் ஓய்ந்த நிலையில், கங்கை அமரன் இப்போ பழைய கலகல அமரன்..!

பழசை மறந்துவிட்டதாக இளையராஜா மீதான விமர்சனம், விஜய் - அஜித் நட்பு, இருவரையும் வைத்து வெங்கட் பிரபு பேன் இந்தியா படம் இயக்கப்போவது உண்மைதானா, ரஜினி - கமலை இயக்காமல் போனது ஏன் உள்ளிட்ட பல கேள்விகளுடன் கங்கை அமரனின் விரிவான பேட்டி


6
MS Dhoni's Exclusive Interview

"சச்சின் என் வழிகாட்டி... சேவாக் என் குருநாதர்!" - தோனி

ந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட நாட்களாக இருந்த ஒரு குறை, தகுதியான ஒரு விக்கெட் கீப்பர் இல்லை என்பதே. ஆடம் கில்கிறிஸ்ட், சங்ககாரா என ஒவ்வோர் அணியிலும் ஒரு விக்கெட் கீப்பர் கலக்கிக் கொண்டிருக்க, `நமக்கு எப்போது அப்படி ஒருவர் கிடைப்பார்?' என, பல வருடங்களாக ஏங்கிக்கிடந்தோம்.

நம் எல்லோர் ஏக்கத்துக்கும் சேர்த்து, வட்டியும் முதலுமாக இன்று கிடைத்திருக்கிறார் தோனி. இந்த ஆண்டில் மிக அதிகமாக 23 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ள தோனியை, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்தித்தோம்...

விகடனுக்கு அளித்த அந்தப் பேட்டியில்தான் சச்சின் என் வழிகாட்டி என உருகினார் தோனி... பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க...