Published:Updated:

அண்ணாமலை பேச்சால் அரண்டு போனதா திமுக? - சிக்கிய காமராஜ்-விக்ரமுக்கு என்னாச்சு|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 8
Listicle
Vikatan Highlights July 8

அண்ணாமலை பேச்சால் அரண்டு போனதா திமுக? - சிக்கிய காமராஜ்-விக்ரமுக்கு என்னாச்சு|விகடன் ஹைலைட்ஸ்


1
ஸ்டாலின் - அண்ணாமலை

அண்ணாமலை பேச்சால் அரண்டு போனதா திமுக?

காராஷ்டிராவில் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, ஏக்நாத் ஷிண்டே ஆட்சியைக் கவிழ்த்தது போன்று, தி.மு.க-விலும் ஒரு ஷிண்டே உருவாவார். இன்னும் ஒரு மாதம்தான். எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்லை. நிறைய பேர் இருக்கிறார்கள். உதயநிதியை அமைச்சராக்கினால் தி.மு.க.,வில் இருந்து ஷிண்டே புறப்படுவார்" எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

" தி.மு.கவில் அப்படி ஒரு நிலை உருவாகுமா... அப்படி ஒரு ஷிண்டே உருவானால் அது யாராக இருக்கும், தற்போது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் யார், அவர் அப்படி வெளியேறினால் அவருடன் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் செல்வார்கள்..." என்ற ரீதியில் அரசியல் அரங்கில் விவாதங்கள் அனல் பறந்தன. தொலைக்காட்சிகளிலும் இரவு நேர விவாத நிகழ்ச்சிகளின் முக்கிய பேசு பொருளானது இந்த விவகாரம்.

அதே சமயம், அண்ணாமலையின் இந்த பேச்சை தாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பேசக்கூடியவர். தி.மு.க ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். எனவே சிவசேனாவையும் தி.மு.க-வையும் ஒப்பிடத்தேவையில்லை" என்று கூறியிருந்தார்.

தி.மு.க தரப்பில் இப்படி ஒரு கெத்து காண்பிக்கப்பட்டாலும், கட்சித் தலைமை மட்டத்தில் அதிர்ச்சி ரேகைகள் வெளிப்பட்டது என்னவோ உண்மைதான் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். " மகாராஷ்டிரா அளவுக்கு இங்கே நடக்க வாய்ப்பில்லை என்றாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க சில சித்து விளையாட்டுகளை தமிழகத்தில் அரங்கேற்றலாம் என்பதை மறுப்பதற்கில்லை" எனச் சொல்லி, சில குறிப்பிட்ட தி.மு.க புள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கட்சி மட்டத்திலும் சில ரகசிய விசாரணைகள், கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமான தரப்பில் உள்ள ஒருவரிடம் விசாரித்தபோது, " எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பாஜக என்ன செய்கிறது என்பதை நன்கு தெரிந்தும், முன்கூட்டியே சுதாரிக்காமல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோட்டை விட்டது போன்று எங்களால் இருக்க முடியாது. நாங்களும் சில சுதாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் என்ன தவறு..?" என்ற கேள்வியோடு முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், இதுகுறித்த தகவல் அண்ணாமலை தரப்புக்கும் எட்ட, ' சும்மா கொளுத்திப்போட்டதற்கே இப்படி அரண்டு போய்விட்டார்களே..!" எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி சிரித்தாரம்.

முன்னதாக ஷிண்டேவைக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசிய பேச்சு மற்றும் அதனால் ஏற்பட்ட சலசலப்புகளின் முழுவிவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


2
முன்னாள் அமைச்சர் காமராஜ்

தண்ணீர்த் தொட்டி, பாத்ரூம் எதுவும் தப்பவில்லை...ரெய்டில் சிக்கிய ஆர். காமராஜ்!

ருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ், டாக்டர்களான அவரின் மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். தஞ்சாவூரிலுள்ள ஆர்.காமராஜின் சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டில் தண்ணீர்த் தொட்டி, பாத்ரூம் என ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஆர்.காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய திடீர் ரெய்டுக்கு என்ன காரணம் என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
மியான்மாரில் கொலை செய்யப்பட்ட இரு தமிழர்கள்.

மணிப்பூர் தமிழர்கள் இருவர் சுட்டுக் கொலை... மியான்மர் எல்லைக்குள் நடந்தது என்ன?

ணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர் இரண்டு தமிழ் இளைஞர்கள், அருகிலுள்ள மியான்மர் எல்லைக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூர் தமிழர்களிடையே மிகுந்த வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், "உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மியான்மாரில் 2 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது... மணிப்பூரின் மோரே பகுதிக்குத் தமிழர்கள் சென்றது எப்படி, அதன் கடந்த கால வரலாறு உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


4
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

"துணிக்கடையையே ஹோட்டலுக்கு வரவழைத்த ஷிண்டே..” - அனுபவம் பகிரும் எம்.எல்.ஏ

காராஷ்டிராவில் கடந்த மாதம் 20-ம் தேதி சிவசேனா எம்.எல்.ஏ-க்களிடையே பிளவு ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரிடமும் விருந்து இருப்பதாகக் கூறி மூன்று கார்களில் ஏக்நாத் ஷிண்டே அழைத்துச் சென்றாராம். விருந்துக்குத்தானே செல்கிறோம் என்று நம்பி அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் லக்கேஜ், மாற்று உடை உட்பட எதையும் எடுத்துச் செல்லாமல் சென்றனர். அவர்கள் மும்பை எல்லையைத் தாண்டி குஜராத் நோக்கிச் சென்றபோதுகூட எங்கு செல்கிறோம் என்று பலருக்குத் தெரியவில்லை.

இது தொடர்பாக குஜராத் சென்ற அனுபவம் குறித்து ஏக்நாத் ஷிண்டே அணியில் இடம்பெற்றிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் விவரிக்கும் முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


5
விக்ரம்

நடிகர் விக்ரமுக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் அனுமதி!

டிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் இதையொட்டி மருத்துவமனையில் உள்ள அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.

விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன், அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட விவரங்கள் குறித்து உடன் இருப்பவர்கள் தெரிவித்த தகவலைப் படிக்க க்ளிக் செய்க...


6
சுகன்யா

"கல்யாணம்ங்கிறது சின்ன வட்டம்.. அதுல சிக்குவதை விடவும்....'' -சுகன்யா பேட்டி 

'என் வாழ்க்கையின் ஒவ்வொரு ஃப்ரேமையும் நேசிக்கிறேன்' என்றெழுதப்பட்ட ஓவியர் சுகன்யா, ‘சின்ன கவுண்ட'ருக்காக பின்கொசுவம் சேலைகட்டிய சுகன்யா, டீச்சர் சுகன்யா. புகைப்படங்கள் புடைசூழ்ந்த வரவேற்பறை முழுக்க விருதுகள். சாதனை படைத்த திரைப்படங்களின் கேடயங்கள். பார்த்துக்கொண்டிருக்கையில், "ஹாய்" என்றபடி உள்ளே வருகிறார் சுகன்யா. பெடல்புஷ்ஷர் பாண்ட், வெளிர்நீல சட்டையில் இப்போது சின்னத்திரை சுகன்யா.

“ம். டி.வி-க்கு வந்துட்டிங்க” என்றதும் புன்னகைக்கிறார். “பாலசந்தர் சார் திடீர்னு ஒரு நாள் போன் பண்ணினார். ஒரு கதை பண்ணி இருக்கிறேன். இந்தக் கதைல வர்ற சரோஜாவை நீ மட்டும்தான் பண்ண முடியும்'னார். ரொம்ப சந்தோஷமா ஒகே சொன்னேன். இப்போ எங்க போனாலும் சரோஜா, சரோஜானுதான் கூப்பிடறாங்க. பரதநாட்டியத்துக்காக டென்மார்க், ஜெர்மனி, லண்டன்னு போறப்பக்கூட ‘வாங்க வாங்க வாங்க சாப்பிட்டீங்களா? சாப்பிட்டீங்களா? சாப்பிட்டீங்களா?’னு . என் டி.வி. காரெக்டர் மாதிரியே பேசறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு டிவி. ரொம்ப பவர்ஃபுல் மீடியா. சினிமாவை காது. செலவழிச்சு போய்ப் பார்க்கணும். டி.வி. ஹால்லயே உட்கார்ந்திருக்கு. என் அம்மாவே சில நேரம் சீரியல் கதாபாத்திரங்களோட ஐக்கியமாகிப் பேசுவங்க” என்கிறார் சிரித்தபடி.

விகடனுக்கு சுகன்யா அளித்த பேட்டியின் முழு உரையாடல்களைப் படிக்க க்ளிக் செய்க...