Published:Updated:

எடப்பாடிக்கு காத்திருக்கும் சோதனைகள்- அவமதிக்கப்பட்ட ஓ.பி.எஸ்-ஹிட்லர் கட்டுரை|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 11
Listicle
Vikatan Highlights July 11

எடப்பாடிக்கு காத்திருக்கும் சோதனைகள்- அவமதிக்கப்பட்ட ஓ.பி.எஸ்-ஹிட்லர் கட்டுரை|விகடன் ஹைலைட்ஸ்


1
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிக்கு காத்திருக்கும் சோதனைகள்..! 

திர்பார்த்தபடியே, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அ.தி.மு.க-வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதே சமயம், ஜெயலலிதாவைப் போன்று கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவது என்பது அத்தனை சுலபத்தில் நடந்துவிடாது.

எதிர் தரப்பில் மல்லுக்கட்டும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கட்சி நிர்வாகிகளிடையே பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பது பல நாட்களுக்கு முன்னரே தெரிந்துவிட்டது. ஆனபோதிலும், அவர் அத்தனை சுலபத்தில் எடப்பாடியை விட்டுவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். விடாமல் தொடரும் அவரது சட்டப் போராட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு போன்ற நடவடிக்கைகளில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே ஒற்றைத் தலைமை விவகாரத்தால் வெடித்த மோதலைத் தொடர்ந்து, உள்ளாட்சி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவினர் போட்டியிட முடியாத அளவுக்கு இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் பன்னீர் செல்வம் அதிரடியாக புகுந்தது கட்சியில் தன்னை ஓரங்கட்டியதற்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தது போன்றே எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் ஆதரவாளர்களுக்கும் நடந்த மோதல் மற்றும் களேபரங்கள் காரணமாக, அரசு தலையிட்டு அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டது.

இனி அலுவலகத்தைத் திறக்கவும், இரட்டை இலைச் சின்னத்துக்காகவும் நீண்ட நெடிய போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் எடப்பாடி. மேலும், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவிக்கு, தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், அதற்கும் மாநிலம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளைப் பேசி 'பலவிதத்தில்' சரிக்கட்ட வேண்டும்.

இன்னொருபுறம் கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் வேகமெடுத்துள்ளது. கூடவே சசிகலா வேறு நானும் இருக்கிறேன் என்ற ரீதியில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் பன்னீர் செல்வம் கைகோப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இன்னொருபுறம் எடப்பாடி மற்றும் அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களது இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு போன்றவை அவரை கலக்கமடைய வைத்துள்ளது.

தற்போதைக்கு அவருக்குள்ள உள்ள ஒரே ஆறுதல், கட்சியைத் தான் கைப்பற்றிவிட்டோம் என்பதுதான். ஆனால், அது நிரந்தரமாக வேண்டுமானால் பல சோதனைகளை அவர் கடந்தாக வேண்டும். அதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே எடப்பாடியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்...

முன்னதாக அ.தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் என்ன நடந்தது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையேயான மோதல் உள்ளிட்ட முழுமையான விவரங்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
அ.தி.மு.க-வினர்

சொந்த ஊரிலேயே அவமதிக்கப்பட்ட ஓ.பி.எஸ்! 

அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இ.பி.எஸ்-க்கு ஆதரவாக அ.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியதும் ஓ.பி.எஸ் தரப்பை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்ப்பட்டதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்-ஸின் சொந்த ஊரான தேனியில் அதிமுக-வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வுகளின் முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
இலங்கை

உக்கிரத்தில் மக்கள்... எதை நோக்கி நகர்கிறது இலங்கை அரசியல் சூழல்..?!

லங்கையில் இப்போது ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. மொத்தத்தில் தலைமையே இல்லை. திரும்பும் வீதியெல்லாம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை மட்டுமே காணமுடிகிறது. மொத்த குடிமக்களும் வீதியில் இறங்கி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். பதவியில் எஞ்சியிருந்த கோத்தபய ராஜபக்சேவும் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

மக்கள் ஒருபுறம் உக்கிரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய நாட்டைவிட்டுத் தப்பி ஓடிவிட்ட நிலையில், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவும் ராஜினாமா செய்துவிட்டார். இவ்வாறு நாட்டின் தலைமை பதவி காலியாக உள்ள நிலையில், எதை நோக்கி நகர்கிறது இலங்கை அரசியல் சூழல் என்பது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


4
கல்வி

+2-க்குப் பிறகு... சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?


5
பாலியல் மிரட்டல் ( சித்தரிப்புப் படம் )

ஒரு வீடியோவுக்கு ரூ.25,000; மொத்தம் ரூ.50 லட்சம்' - மாணவியை மிரட்டிய இன்ஜினீயர் கைது!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன், இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். வேலைக்கு செல்லாத அவர், தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான ஆப்ஸைப் பயன்படுத்தி சிலரைச் சந்தித்துள்ளார். தன்பாலின சேர்க்கையாளர்களை மிரட்டி செல்போன், பணத்தை விக்னேஷ்வரன் பறித்ததாக கடந்த 2021-ம் ஆண்டு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் விக்னேஷ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த இன்ஜினீயர் விக்னேஷ்வரன், தற்போது 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


6
Madan Talks about Adolf Hitler

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - மதன்

ரு நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக வாளேந்திய மன்னர்கள் வரலாறு நெடுக பலருண்டு!

உலகெங்கும் நாடுகளின் எல்லைகளை நிர்ணயித்தது யுத்தங்கள்தான் என்பது கசப்பானதொரு உண்மை. அலெக்ஸாந்தர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போன்றவர்கள் போர்க்களத்தில் குதித்ததால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்! இருப்பினும் வரலாறு மேற்கண்ட மன்னர்களையும் அவர்கள் ஈடுபட்ட போர்களையும் ஏற்றுக் கொள்கிறது! அவர்கள் மாவீரர்கள் என்று போற்றப்பட்டார்கள்!

ஆம், யுத்தத்தை கடவுள்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள்! இருப்பினும் இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து முடிவதற்குள் யூதர்கள் மீது ஹிட்லர் கட்டவிழ்த்த இன்னொரு பிரத்யேகமான யுத்தத்தை மனித சமுதாயம் இன்றளவும் அருவருப்போடும் வேதனையோடும் பார்க்கிறது.

ஹிட்லர் தலைமையில் நாஜி அரசு அறுபது லட்சத்துக்கும் மேற்பட்ட, நிராயுதபாணிகளான யூதர்களை தீர்த்துக் கட்டியது உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடூரமான சம்பவம் குறித்த பதைபதைப்பான தகவல்களை விரிவாக படிக்க க்ளிக் செய்க...