Published:Updated:

அதிமுகவில் புதிய கலகம்-அக்னிபத் வன்முறை- கழுதை பண்ணை-எம்.ஜி.ஆர் உடன் ரவுண்ட் அப்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 17
Listicle
Vikatan Highlights June 17

அதிமுகவில் புதிய கலகம்-அக்னிபத் வன்முறை- கழுதை பண்ணை-எம்.ஜி.ஆர் உடன் ரவுண்ட் அப்|விகடன் ஹைலைட்ஸ்


1
அதிமுக கூட்டம்

"இ.பி.எஸ்-ஸும் வேண்டாம்... ஓ.பி.எஸ்-ஸும் வேண்டாம்...!" - அ.தி.மு.க.வில் புதிய கலகக்குரல்கள்

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அதன் வாக்குவங்கியின் பலமே கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் மற்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீதான விசுவாசத்துக்காக இன்னமும் கட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதன் அடிமட்டத்தொண்டர்கள்தான். நகர்ப்பகுதிகளிலும் அன்றாட கூலித்தொழிலாளர்கள், மீனவர்கள் என எளிய மக்களின் ஆதரவில்தான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அக்கட்சி வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரது தலைமையில் கட்சி செயல்படத் தொடங்கியது. ஆனாலும், கட்சியில் யார் பெரியவர் என்ற போட்டியில் இருவருமே மறைமுகமாக அவ்வப்போது மோதிக்கொண்டதில், இருவரது சமூகம் சார்ந்து கட்சியில் பிளவும் அதிருப்தியும் எட்டிப்பார்த்தன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், ஒற்றைத் தலைமையை முன்வைத்து அதிமுகவில் சமீப நாட்களாக அரங்கேறி வரும் நிகழ்வுகளைப் பார்த்து, அக்கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரையுமே மனதளவில் ஏற்றுக்கொள்ளாத கட்சி நிர்வாகிகளிடையே கோபக்குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

"அதிமுகவை தயவு செய்து சாதி கட்சியாக மாற்றிவிடாதீர்கள். ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இருவருமே ஒதுங்கிக்கொள்ளுங்கள்..." என்ற ரீதியில் எழுந்துள்ள புதிய கலகக்குரல்கள் குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
அண்ணாமலை - செந்தில் பாலாஜி

அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி: அடுத்தக்கட்ட மோதல்...

2021 சட்டமன்ற தேர்தலிலிருந்தே பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையேயான முட்டல் மோதல் தொடங்கி விட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தன்னை தோற்கடிக்க செந்தில் பாலாஜி கங்ஙணம் கட்டி செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார் அண்ணாமலை. பின்னர் தேர்தலில் வென்று தி.மு.க ஆட்சி அமைத்ததிலிருந்தே, செந்தில் பாலாஜி கவனிக்கும் இலாகாக்களைக் குறிவைத்து ஊழல் குற்றச்சாட்டுகளை அவ்வப்போது சுமத்தி வருகிறார் அண்ணாமலை.

பதிலுக்கு செந்தில் பாலாஜி மான நஷ்ட வழக்கு, வக்கீல் நோட்டீஸ் என அதிரடிக் காட்டினாலும், அண்ணாமலையும் அசருவதாக இல்லை.

இந்த நிலையில், “தி.மு.க ஆட்சி மாறியதும் செந்தில் பாலாஜி முதலில் கைது செய்யப்படுவார்" என அண்ணாமலை நேற்று கூறியது, இருவருக்கும் இடையேயான மோதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

பதிலுக்கு அண்ணாமலைக்கு, செந்தில் பாலாஜி கொடுத்துள்ள காட்டமான பதிலடியைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
செகந்தராபாத் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைப்பு ( ட்விட்டர் )

'அக்னிபத்' திட்டம்: அடங்காத வன்முறை... ரயில் சேவைகள் பாதிப்பு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14-ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டதிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பீகாரில் போராட்டக்காரர்கள் சாலைமறியல், ரயில்மறியலில் ஈடுபட்டதால் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டம் வட மாநிலங்களைத் தொடர்ந்து தென்மாநிலங்களுக்கும் பரவத்தொடங்கி உள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
ஸ்ரீனிவாஸ் கவுடா

42 லட்சம் முதலீடு... 17 லட்சத்திற்கு ஆர்டர்... கல்லாவை நிரப்பும் கழுதை பால் பண்ணை!

சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை ஆரம்பித்திருக்கிறார்.

கழுதை பால் பண்ணையை ஆரம்பிக்க ஆர்வம் இருப்பவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறார். இது தொடர்பான விரிவான தகவலைப் படிக்க க்ளிக் செய்க...


5
போஜ்புரி... வேறமாரி!

போஜ்புரி... வேற மாரி! - பீகார் 'ஜிகினா' உலக தகவல்கள்...

தூக்கம் வராத இன்ஸோம்னியா நாள்களில் போஜ்புரி சினிமாக்கள் என் கண்ணில் பட்டன. அதுவரை பாட்னா என்றால் அஞ்சாப்பு பாடப்புத்தகத்துல பீகாரின் தலைநகரம்னு படிச்சிருக்கேன். சமீபத்தில் போஜ்புரி சினிமாக்கள் பார்த்ததும் வேறொரு இமேஜ் வந்துவிட்டது. வாங்க அதைப் பத்திச் சொல்றேன். அதுக்கு முன்னாடி... பேல்பூரி, பானிபூரி கேள்விப்பட்டிருப்பீங்க... அதென்ன போஜ்புரி?

இந்தியாவின் பூர்வாஞ்சல் எனப்படும் மேற்கு பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெற்கு நேபாளமான தராய் பகுதிகளில் பேசப்படும் இந்தியைப்போலவே இருக்கிற ஆனால், இந்தி அல்லாத ஒரு இந்திய மொழி. போஜ்புரி சினிமாவை `போஜிவுட்', `பிர்ஹாவுட்' என அன்போடு பீகாரிகள் அழைக்கிறார்கள். மார்க்கெட் இழந்த நம்ம ஊர் நடிகைகள் ரம்பா, நக்மா, நீத்து சந்த்ரா என நிறைய பேர் அங்கு கடைசியாய் நடித்தார்கள்.

பத்து லட்சம் இருந்தா போதும், ஒரு போஜ்புரி படத்தை எடுத்துடலாம். வியாபாரமும் குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு ஆகிவிடும் என்பதால் `சின்னக் கல்லு பெத்த லாபம்' போல் ருசி கண்டனர் பீகார் கலைப் பூனைகள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை பூண்டோடும், இஞ்சி கசகசாவோடும் அழிக்கும் வேலையைப் படங்களில் தவறாமல் செய்பவர்கள் போஜ்புரி மாஸ் மசாலா ஹீரோக்கள். கூடவே தாராள கிளாமர் காட்டும் கொழுக்மொழுக் ஹீரோயின்கள், கேசரி கலரில் வரும் ரத்தச்சாயத்தோடு கூடிய ஃபைட்டுகள் என பீகார் மாநிலத்தின் இளசுகளுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பெரிய பொழுதுபோக்கு 'ஜிகினா'வாக ஜொலிக்கும் போஜ்புரி சினிமா குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


6
Behind the Scenes - MGR's Anbe Vaa

இமயத்தின் மீது எம்.ஜி.ஆர்.! #AppExclusive

சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது. மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம்.

ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம்.

'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன்.

புதிய வானம்... புதிய பூமி... 1966-ல எம்.ஜி.ஆரோட ஒரு குளுகுளு ரவுண்ட்-அப்பைப் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism