'சரத்பவாருமா தாவல்?' சிவசேனா அதிர்ச்சி - விஜயகாந்துக்கு என்ன ஆச்சு- வடிவேலு தொடர்|விகடன் ஹைலைட்ஸ்

'சரத்பவாருமா தாவல்?' சிவசேனா அதிர்ச்சி - விஜயகாந்துக்கு என்ன ஆச்சு- வடிவேலு தொடர்|விகடன் ஹைலைட்ஸ்

ஆட்டம் காணும் சிவசேனா ஆட்சி... பாஜக கூட்டணியில் சரத்பவார்?
கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரங்கேற்றிய ஆட்சிக் கவிழ்ப்பு முறையை தற்போது மகாராஷ்டிராவிலும் காட்டத் தொடங்கிவிட்டது" எனக் கொந்தளிக்கிறது சிவசேனா கட்சி.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் பதவியை பாஜக-வுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து 'மகா விகாஸ் அகாடி' என்ற கூட்டணி ஆட்சியை அமைத்தது சிவசேனா. அப்போதிருந்தே சிவசேனா ஆட்சியைக் கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருந்த பாஜக, நேற்றைய சட்ட மேலவைத் தேர்தலில் அதனை கச்சிதமாக அரங்கேற்றியதாக புலம்புகிறார்கள் சிவசேனா தலைவர்கள்.
இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கும் மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனாவின் முக்கிய தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவுவதாக கூறபப்பட்ட நிலையில், அதனை மோப்பம் பிடித்த பாஜக, அவரைத் தனது வலையில் வீழ்த்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 21 பேருடன் திடீரென மாயமாகி விட்டதாகவும், அவர்கள் குஜராத்தில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் பாஜக பக்கம் தாவி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டசபையின் மொத்த பலம் 288. ஒரு உறுப்பினர் இறந்துவிட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி' என்ற கூட்டணி அரசுக்கு 152 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், ஆளும் கூட்டணியின் பலம் 130 ஆகக் குறைந்து விடும். இப்படியான சூழலில், ஆட்சிக் கவிழ்ந்தால், பாஜக தரப்பிலும் ஆட்சி அமைக்க பலம் இல்லை என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம், மகா விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை அமைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒருவேளை இந்த முறையும் கிங் மேக்கராக உருவெடுக்க நினைத்து, பவாரின் 53 எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளித்தால், சிவசேனா அவ்வளவுதான். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகாது என உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் பவாரின் மகன் அஜித் பவார் ஏற்கெனவே 2019 ல் பாஜக உடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றவர்தான்.
இது குறித்த தகவல் சிவசேனா தலைமைக்கும் எட்டியுள்ளதால், அக்கட்சி அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. இந்த நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க உத்தவ் தாக்கரே மேற்கொண்டுள்ள இறுதி முயற்சி குறித்த தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு..?
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நீரிழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், விஜயகாந்த் உடல் நிலை தொடர்பாக தேமுதிக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவலைப் படிக்க க்ளிக் செய்க...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆகிறாரா யஷ்வந்த் சின்ஹா?
கடந்த 15-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மம்தா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பொது வேட்பாளர் தேர்வில் முன்மொழியப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மூவருமே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
'அக்னிபத்' திட்டம்: மத்திய அரசின் புதிய நிலைப்பாடு என்ன?
இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் , நான்கு ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களில், 25 சதவிகிதம் பேர் மட்டுமே நேரடியாக இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், அரசு தனது நிலையில் உறுதியாக இருக்கிறது. 'அக்னிபத்' திட்டம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ள கருத்தைப் படிக்க க்ளிக் செய்க...

வட்டாரப் பெருமை, சாதியப் பெருமைகளைக் கேள்வி கேட்கும் கலைஞன் வடிவேலு!
நகைச்சுவை என்பது ஒருவரின் இயல்பிலே இருக்க வேண்டியது அவசியம். இருவருக்கு இடையில் நிகழ்கிற உரையாடலின்போது, எதிராளியைச் சிரிக்க வைப்பது ஒருவகையில் சவால்தான். வடிவேலு, திரைப்படத்தில் பேசிய வசனங்கள் பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலைத்திருக்கின்றன. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று திருவள்ளுவர் சொல்லியதைப் பின்பற்றுவதுபோலப் பெரும்பான்மைத் தமிழர்கள் அன்றாட வாழ்வில் வடிவேலுவின் திரைப்பட வசனங்களைச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
துயரமான நேரத்தில்கூட நகைச்சுவை உணர்வை ஏற்படுத்திடும் வல்லமையுடையன வடிவேலுவின் நகைச்சுவை மொழிகள். வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் பேசிய சொற்கள், கதாநாயகர்களின் பன்ச் டயலாக்கைப் புறந்தள்ளிவிட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கும் வடிவேலு பேசிய நகைச்சுவை வசனங்கள் உற்சாகம் அளிக்கின்றன.
காமெடியனாக நடிக்கிற வடிவேலு ஒட்டுமொத்தத் தமிழர்களின் அபிமானத்திற்குரியவர் என்ற பெருமை, அவர் பெற்ற விருதுகளைவிட உன்னதமானது.
குறிப்பாக வட்டாரப் பெருமை, சாதியப் பெருமைகளைக் கேள்வி கேட்கும் கலைஞனாக வடிவேலு நடித்தது, வெறுமனே சிரிக்க வைப்பது மட்டும் அவருடைய நோக்கமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களை வசப்படுத்திய வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் எவ்வளவு நுட்பமானவை என்பதை 'மதுரைத் தெருக்களின் வழியே' தொடரில் படிக்க க்ளிக் செய்க...

பிறவியிலேயே இரு கைகள் இல்லை; பல்கலை தேர்வில் முதல் ரேங்க் பெற்று சாதித்த கண்மணி!
கேரள மாநிலம், மாவேலிக்கரை அறுநூற்றிமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கண்மணி. தந்தை சசிகுமார், தாய் ரேகா. கண்மணிக்கு, பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை. கால் சராசரியான வளர்ச்சி இல்லாதது என உடலில் பல பிரச்னைகள் இருந்தன; ஆனால், மனம் நிறைய தன்னம்பிக்கையைக் கொண்டவர் கண்மணி.