Published:Updated:

உத்தவ் தாக்கரேவை எச்சரித்த உளவுத்துறை- எடப்பாடி வியூகம்- மனம் திறக்கும் தேவயானி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 22
Listicle
Vikatan Highlights June 22

உத்தவ் தாக்கரேவை எச்சரித்த உளவுத்துறை- எடப்பாடி வியூகம்- மனம் திறக்கும் தேவயானி|விகடன் ஹைலைட்ஸ்


1
உத்தவ்தாக்கரே

ஆட்சிக் கவிழ்ப்பு: முன்னரே எச்சரித்தும் கோட்டை விட்ட உத்தவ் தாக்கரே!

காராஷ்டிராவில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க பக்கம் தாவியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே, 34 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தோடு மகாராஷ்டிரா ஆளுநகருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், ஆட்சி எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு உத்தவ் தாக்கரேவின் மெத்தனமான அணுகுமுறைதான் காரணம் என்றும், 2 மாதங்களுக்கு முன்னரே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடக்கலாம் என மாநில காவல்துறையின் உளவுப் பிரிவு முதலமைச்சரை எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏக்நாத் ஷிண்டே உள்பட பல சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் காணப்பட்ட கட்சித் தலைமை மீதான அதிருப்தியையும், அவர்களின் மன நிலை என்ன என்பதையும் உணர உத்தவ் தாக்கரே தவறிவிட்டதையும், கட்சியில் அவரது பிடி எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதையுமே தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துவதாக வருத்தமுடன் சொல்கிறார்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவைச் சேர்ந்த 8 முதல் 10 எம்.எல்.ஏ-க்கள் வரை பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருப்பதாக அரசுக்கு தெரியப்படுத்தியதாகவும், 2 மாதங்களுக்கு முன்னரே உளவுத் துறை, இது தொடர்பாக ரகசிய தகவலை அனுப்பியும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மகாராஷ்டிரா காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத்பவாரும் உத்தவ் தாக்கரேவிடம் இதே எச்சரிக்கையை விடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையிலிருந்து காணாமல் போன சிவசேனா எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான நிதின் தேஷ்முக், குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவுக்குத் திரும்பி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம் எப்போதுமே உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்தான் என்றும், ஏக்நாத் ஷிண்டே 'எங்கள் அமைச்சர்' என்பதால்தான் அவருடன் சென்றதாகவும் கூறினார். தன்னைக் கொல்ல குஜராத் போலீஸ் மற்றும் சிலர் சதி செய்ததாக இன்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், தனக்கு மாரடைப்பு எனக் கூறி குஜராத் போலீசார் வலுக்கட்டாயமாக தன்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக கைலாஷ் பாட்டீல் என்ற சிவசேனா எம்.எல்.ஏ-வும் குஜராத்திலிருந்து மகாராஷ்டிரா திரும்பி இருந்தார். தன்னை ஏமாற்றி ஷிண்டேவின் ஆட்கள் குஜராத்துக்கு காரில் கடத்த முயன்றதாகவும், ஆனால் தாம் தப்பி வந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், ஏக்நாத் ஷிண்டே, 34 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தோடு மகாராஷ்டிரா ஆளுநகருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஆட்சி எந்த நேரமும் கவிழலாம் என்ற சூழலில், முதல்வர் உத்தவ் தாக்கரே மேற்கொண்டுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
பட்னாவிசுடன் ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவின் நம்பிக்கைக்குரிய 'தளபதி’ ஏக்நாத் ஷிண்டே... பாஜக பக்கம் சாய்ந்தது ஏன்?!

காராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு எந்த நேரமும் கவிழலாம் அல்லது ராஜினாமா செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தலைமறைவாக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் நடவடிக்கை அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

சிவசேனாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே எப்படி பாஜக பக்கம் சென்றார் என்பதற்கான காரணம் குறித்த தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க....

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
எடப்பாடி பழனிசாமி

`இணை' பதவியிலிருந்து `உச்ச' பதவி... எடப்பாடி வியூகம் நிறைவேறுமா?!

.தி.மு.க-வில் நான்காண்டுகளாக எல்லா முடிவுகளையும் எடுத்ததால், இனி ஒற்றைத் தலைவராக இருந்துகொண்டு அதனைச் செய்வதுதான் எடப்பாடியின் எண்ணம். ஆனால், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் போன்றவற்றில் ஏமாந்ததுபோல இதிலும் ஏமாந்தால் அரசியல் எதிர்காலமே நாசமாகிவிடும் என்பதால் பன்னீர் செல்வம் தரப்பு அதற்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டி வருகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க-வில் உச்ச பதவியை எட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் வியூகம், வகுக்கும் திட்டங்கள் அவருக்கு கைகொடுக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
திரெளபதி முர்மு

ஆசிரியர் பணி டு ஜனாதிபதி வேட்பாளர்! - திரெளபதி முர்மு கடந்து வந்த பாதை...

திரெளபதி முர்மு, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெறுவார். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்குக் கிடைக்கும்.

பா.ஜ.க-வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவின் ஆசிரியைப் பணியிலிருந்து தொடங்கி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


5
கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ

கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ... வீடியோ காட்சி பரவியதால் பரபரப்பு

ர்நாடகா மாநிலம், நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐ.டி.ஐ கல்லூரியில் ஆய்வு பணிக்காகச் சென்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ் என்பவர் கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

என்ன நடந்தது..? எதனால் ஜனதா தள எம்.எல்.ஏ கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்தார் என்பதையும், அது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோவையும் காண க்ளிக் செய்க...


6
An Exclusive Interview - Devayani

சிக்கல் எங்கே? தேவயானி பேசுகிறார்... 

கமல் - சரிகா, பார்த்திபன் - சீதா, ரகுவரன் - ரோகிணி என நட்சத்திரக் குடும்பங்களுக்குள் குழப்பங்கள்!

வாழ்க்கை முழுக்கக் கைகோத்து நடக்க ஆசைப்பட்டுக் கரம் பிடித்த வர்கள், இப்போது தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள்.

நட்சத்திரக் குடும்பங்கள் இப்படிச் சிதறுவது ஏன்? சிக்கல் எங்கே?

சமீபத்தில் திடீர்க் காதல் திருமணம் செய்துகொண்ட தேவயானி - ராஜ்குமாரன் கதையைக் கேளுங்கள்.

தன் கணவர் ராஜ்குமாரனுக்காக, தானே ஒரு படம் தயாரித்தார் தேவயானி. 'காதலுடன்' என்ற அந்தப் படம் ரிலீஸாகி மரண அடி வாங்கியது. லட்சக் கணக்கில் நஷ்டம்.... உடனே அடுத்த வதந்தி கிளம்பிவிட்டது.

"சினிமாக்காரங்க குடும்பம் கண்ணாடி மாளிகை மாதிரி. அதுல சின்னக் கீறல்கூட விழாமப் பார்த்துக்கணும்..." எனச் சொல்லும் நடிகை தேவயானி, 2003 ல் அளித்த பேட்டி உங்களுக்காக...


7
ஒரு கைதியின் டைரி

ஒரு கைதியின் டைரி: பாரதிராஜா - கமலின் கமர்ஷியல் ரூட்டும், உதவிக்கு வந்த கே.பாக்யராஜும்!

பாரதிராஜாவிற்கு உறுதுணையாக இருந்தவர்களில் அவரின் உதவி இயக்குநர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. மணிவண்ணன், மனோபாலா என்று அந்தப் பட்டியல் பெரிதாக நீளும். இதில் பிரத்யேகமாக குறிப்பிடத்தகுந்தவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் தொடர் வெற்றிக்கு பாக்யராஜிற்கு இருந்த திரைக்கதை ஞானம், கோர்வையாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லும் திறமை, வெகுசன பார்வையாளனின் ரசனையைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தது போன்ற விஷயங்கள் மிக உதவிகரமாக இருந்தன. பாக்யராஜ் இயக்குநராக பிரமோஷன் ஆகி, பாரதிராஜாவை விட்டு விலகி விட்ட பிறகான திரைப்படங்களில் இந்த வெற்றிடத்தை உணர முடியும்.

இந்த நிலையில், தனியாக படமெடுக்க சென்ற பிறகும், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'ஒரு கைதியின் டைரி' படத்தில் கே.பாக்யராஜ் உதவிக்கு வந்தது ஏன்... படம் தொடங்குவதற்கு முன்னர் நடந்த குழப்பங்கள் என்ன என்பது உள்ளிட்ட சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism