Published:Updated:

சிவசேனா முதுகில் குத்தினாரா சரத்பவார்-அதிமுக முழு அப்டேட்ஸ்-விஜய்-விக்ரம் 'மீட்'|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 23
Listicle
Vikatan Highlights June 23

சிவசேனா முதுகில் குத்தினாரா சரத்பவார்-அதிமுக முழு அப்டேட்ஸ்-விஜய்-விக்ரம் 'மீட்'|விகடன் ஹைலைட்ஸ்


1
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

" சரத் பவாரும் எங்கள் முதுகில் குத்திவிட்டார்..!" - குமுறும் சிவசேனா

காராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு இன்று சந்திக்கும் நெருக்கடிக்கு மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதுதான் முக்கிய காரணம் என்றாலும், ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்த சரத் பவாரின் குழப்பமான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம் என்றும், அவரும் முதுகில் குத்திவிட்டார் குற்றம் சாட்டுகின்றனர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான கட்சித் தலைவர்கள்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட போட்டிக் காரணமாக, சிவசேனா கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாஜக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பக்கம் தனது பார்வையைத் திருப்பியது. சரத் பவாரை வளைக்க முயன்ற நிலையில், அவர் உடனடியாக உறுதியான பதிலைத் தெரிவிக்காததால், அவரது சகோதரர் மகன் அஜித் பவாரை, அவர் மீதான மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ. 25,000 கோடி மோசடி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கைக் காட்டி தங்கள் பக்கம் இழுத்தது பாஜக.

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து 'மகா விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், இரவோடு இரவாக பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இது குறித்து உடனடியாக சிவசேனா, சரத் பவாரிடம் கேட்டபோது, " பாஜக-வுக்கு தாம் ஆதரவு அளிக்கவில்லை" என மறுத்தார். இதுகுறித்து அப்போதே சிவசேனா தரப்பில், " அஜித் பவாரின் நடவடிக்கை சரத் பவாருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்..?" என அதிருப்தி தெரிவிக்கப்பட்டதோடு, கூட்டணியில் ஏற்பட்ட முதல் குழப்பமாகவும் கருதப்பட்டது.

பின்னர் ஒரு வழியாக ஒரே நாளில் பட்னாவிஸ் அரசு கவிழ்ந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த நிலையில், பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிவசேனாது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், "தற்போதைய நெருக்கடிக்கு அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஒரு காரணம் என்றாலும், தொடக்கத்திலிருந்தே சரத் பவார் தரப்பில் காட்டப்பட்ட குழப்பமான அணுகுமுறையும் இன்னொரு முக்கிய காரணம்" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

" ஒரு கட்சியில் தலைமைக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அதனை எப்படி அடக்க வேண்டும் என்பது சரத் பவார் அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் தெரியாது. ஏனெனில் அவரே அதை கச்சிதமாக செய்துகாட்டி, ஆட்சியைக் கவிழ்த்து மகாராஷ்டிரா முதல்வரானவர்தான். அதன்பின்னர் 2019 ல் அஜித் பவாரால் கட்சியில் ஏற்பட இருந்த பிளவையும் சரிக்கட்டினார். ஆனால், சிவசேனாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாததாகவே தெரியவில்லை.

மேலும், சிவசேனாவில் என்ன நடக்கிறது, ஏக்நாத் ஷிண்டே பின்னணியில் யார் இருக்கிறார் என்பதெல்லாம் சரத் பவாருக்குத் தெரியாமல் இல்லை. ராஜ்யசபை தேர்தலில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் அவர் வெளியிட்ட கருத்தும், பாஜக-வுக்கு வெற்றித்தேடித் தந்ததாக தேவேந்திர பட்னாவிஸைப் பாராட்டியதும் அவரது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகவே உணர்த்தியதோடு மட்டுமல்ல, சிவசேனா எம்.எல்.ஏ-க்களிடையேயும், மகா விகாஸ் அகாடி' கூட்டணியிலும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இதுதான், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தலின்போது ஷிண்டே மேற்கொண்ட கலகத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏற்கெனவே, சிவசேனா எம்.எல்.ஏ-க்களுக்கும் கூட்டணியில் முக்கிய துறைகளைக் கையில் வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் மோதல் நிலவி வந்தது. தங்களது தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்து வந்த சிவசேனா எம்.எல்.ஏ-க்களுக்கு, ஏக்நாத் ஷிண்டேவின் எழுப்பிய கலகக்குரல் ஒரு வாய்ப்பாக அமைந்து, அவர் பின்னால் செல்ல காரணமாக அமைந்துவிட்டது. கட்சியின் வளர்ச்சிக்கு தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணி முக்கிய தடையாக இருப்பதாகவும், எனவே அக்கட்சியுடனான உறவை முறிக்க வேண்டும் என்றும் ஷிண்டே தற்போது கூறுவதைப் பொருத்திப் பார்த்தால், இப்போதைய நெருக்கடிக்கு யார் காரணம் என்பது தெளிவாக தெரியும்.

மேலும், 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி பலவீனமாக இருப்பதும், இதை எந்த நேரம் வேண்டுமானாலும் பாஜக உடைக்கக்கூடும் என்பதும் பவாருக்கு நன்றாகவே தெரியும். தனது கட்சியிலேயே அஜித் பவார் போன்ற பலவீனமான பாஜக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு தனது கட்சி காரணம் என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்பதால்தான், சிவசேனாவில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க தொடக்கத்திலேயே உதவாமல் இருந்தார். அதாவது ஆட்சி கவிழ்ந்தால், அது சிவசேனா எம்.எல்.ஏ-க்களைக் கட்டுப்படுத்த தவறிய உத்தவ் தாக்கரேவின் பலவீனமாக தலைமையே காரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவரது நடவடிக்கைகள் காணப்படுகின்றன. சுருக்கமாக சொன்னால் அவரும் எங்கள் முதுகில் குத்திவிட்டார்" என மேலும் குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள்.

இந்த நிலையில், '24 மணி நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார்!' என சிவசேனா அறிவித்திருப்பது, அக்கட்சி மீண்டும் பாஜகவுடன் கைகோக்க தயாராகி விட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஆனால் அது சாத்தியமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

இந்த நிலையில், ஒரு காலத்தில் மிக நெருக்கமான கூட்டணியாக இருந்த சிவசேனாவும் பாஜகவும் பரம எதிரிகளானது எப்படி என்பதை படிக்க க்ளிக் செய்க...


2
ஓ.பி.எஸ்

பாதியில் வெளியேறிய பன்னீர்செல்வம்... அதிமுக பொதுக்குழு முழு அப்டேட்ஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பல்வேறு சர்ச்சைகள் உடன் நடந்து முடிந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்தது செல்லாது. தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் பொதுக்குழுவும் ரத்து ஆனது போல் ஆகும்" என்றார்.

முன்னதாக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறியது ஏன், அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷங்கள், தண்ணீர் பாட்டிலை வீசி தாக்கப்பட்டது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான செய்திகளின் முழுமையான தொகுப்பை படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
அண்ணாமலை

கழுகார் அப்டேட்ஸ்: அடம்பிடிக்கும் அண்ணாமலை...அனல் பறக்கும் கமலாலயம்!

" 'ஒண்ணு அண்ணாமலை இருக்கணும், இல்லைன்னா நான் இருக்கணும்’ என கட்சியின் சீனியர் டெல்லிக்கும் நாக்பூருக்கும் புகார் அனுப்ப, மற்ற இருவரும் ‘இனி கமலாலயம் பக்கமே வர மாட்டோம்’ எனக் கூறி வெளியேறிவிட்டார்களாம்..."

கமலாலயத்தில் நடப்பது என்ன, எடப்பாடி முடிதத டீலிங், தினகரன் மீண்டும் ஆக்டிவ் ஆனதன் பின்னணி உள்பட கழுகார் தரும் அப்டேட்ஸ் தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
Khap அமைப்பு

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக khap அமைப்பு புதிய எச்சரிக்கை 

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக கூறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன. மேலும், அக்னிபத்-திலிருந்து 4 ஆண்டுகள் பணிமுடித்து வெளிவரும் 75 சதவிகித வீரர்களுக்கு, ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கும் இளைஞர்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம் என ஹரியானாவில் `காப்' எனும் சமூக அமைப்பு எச்சரித்திருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்களைப் படிக்க க்ளிக் செய்க...


5
கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி

 இளம்பெண் நெருங்க முடியாத ஆத்திரம் - குமரியை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கின் பின்னணி...

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான சகாயராஜுக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உண்டு. ஆன்றோ சகாயராஜும், அவரின் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை செய்துவருகின்றனர். மற்றொரு மகன் ஆரோன் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

பவுலின்மேரி அவரின் தாயார் திரேசம்மாளுடன் முட்டம் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பவுலின் மேரி, அவரின் தாய் திரேசம்மாள் ஆகியோர் கடந்த 7-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். கன்னியாகுமரியை அதிர வைத்த இந்த இரட்டை கொலை வழக்கின் பின்னணி தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


6
ஒற்றைக் காலில் நிற்கும் நிலை

ஆயுளைக் கணிக்கும் ஒற்றைக் காலில் நிற்கும் உடற்பயிற்சி!

ஒற்றைக் காலில் நிற்கும் உடற்பயிற்சி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், ஒற்றைக் காலில் நிற்பது என்பது, உங்கள் ஆரோக்கியம், நீங்கள் வாழப்போகும் நாள்களைத் தொடர்புபடுத்த வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒற்றைக் காலில் உங்களால் எத்தனை நொடிகள் நிற்க முடியும்? ஒருவரால், தன் உடலை சமநிலையில் நிறுத்த முடிவதற்கும், அவர் ஆரோக்கியத்துகும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய தொடங்கிய ஆராய்ச்சியாளர்கள், ஒற்றைக் காலில் நிற்கும் உடற்பயிற்சி ஒருவரது ஆயுளைக் கணிக்கும் என்கிறார்கள். இது தொடர்பான விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...


7
Vijay, Vikram Exclusive Interview

விகடனுக்காக.. விஜய்-விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

‘ஓ யெஸ்!’’ - இதுதான் முதல் பதில்!

‘‘எங்கே, எப்போனு சொல்லுங்க, சந்திக்கலாம்’’ என்றனர் இருவருமே உற்சாகமாக!

சென்னை- க்ரீன்பார்க் ஓட்டல்...

வழுக்கியபடி வந்து நிற்கிறது போர்டிகோவில் ‘ஸ்பாஷ்’... கறுப்பு நிற கார். ‘‘ஹை... நான்தான் ஃபர்ஸ்ட்!’’- ஜாலியாக வந்து இறங்குகிறார் விக்ரம். அடுத்த சில விநாடிகளிலேயே சீறி நுழைகிறது பி.எம்.டபிள்யூ. அதுவும் ப்ளாக். ‘‘இன்னும் அட்டென்டன்ஸ் எடுக்கலியே, விஜய் பிரசென்ட் சார்!’’ எனக் கலக்கலாக விஜய்!

‘ஹாய், ஹலோ’க்கள் பரிமாறியபடி இருவரும் ஓட்டலுக்குள் நுழைய, அதிர்கிறது க்ரீன்பார்க்!

செல்போன் கேமராக்கள் பளிச்சிட, ஆட்டோ கிராஃப்கள் துரத்த, தப்பித்து லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள். கண்ணாடிச் சதுரமாக இருக்கிற லிஃப்ட்டினில் விஜய் தலை கோத, விக்ரம் லுக் விட, இருவருமே சிரிக்கிறார்கள்.

விஜய் - விக்ரம்... தமிழ்த் திரையின் இளைய தலைமுறை துருவ நட்சத்திரங்கள். ஒருவர், பன்ச் டயலாக்குக்கும், கலகல காமெடிக்கும், குத்துப் பாட்டுக்கும், பிரபலமான அதிரடி ஆக்ஷன் ஹீரோ. இன்னொருவர், தன் பர்ஸில் கிரெடிட் கார்டுகளுக்கு நடுவே தேசிய விருதுகளுக்கும் இடம் வைத்திருக்கிற நம்பிக்கை நாயகன். இந்த சூப்பர் ஹீரோக்களுக்குள் ஒரு ஒற்றுமை, இருவருமே சென்னை- லயோலா கல்லூரித் தயாரிப்பு!

‘லயோலான்னா என்ன ஞாபகம் வரும்?’’

ஒரே வேகத்தில் இருவரும் சொல்கிறார்கள்... ‘‘கார் பார்க்!’’

விக்ரம் படித்தது ஆங்கில இலக்கியம். விஜய், விஷுவல் கம்யூனிகேஷன்!

‘‘கிளாஸ்ல இருந்த நேரத்தைவிட, பார்க்கிங் ஏரியாவில்தான் எல்லோரும் டாப் அடிப்போம். எதுக்குன்னே தெரியாம எப்பவும் சிரிச்சுட்டே இருப்போம். படிப்பைத் தவிர, சைட் அடிக்கிறதுதான் பொழுதுபோக்கு! மேடை நாடகங்கள் நடிக்க ஆரம்பிச்சேன். ரெகுலரா ஜிம் போக ஆரம்பிச்சேன். அப்பவே எனக்கு சினிமா கனவு. உங்களுக்கு எப்படி விஜய்?’’

‘‘நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே. அப்பா அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறைய படங்களில் நடிக்க வெச்சார். குட்டி விஜயகாந்த்னா அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. எனக்கும் சினிமா தான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு!’’

விஜய்-விக்ரம் சந்திப்பின் சுவாரஸ்ய பகிர்தலை மேலும் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism