Published:Updated:

வளைகுடா வேலை பாதிக்குமா?- எடப்பாடியின் மூவ்-ஆன்லைன் ரம்மிக்கு தடை?- வங்கி கடன் வட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 10
Listicle
Vikatan Highlights June 10

வளைகுடா வேலை பாதிக்குமா?- எடப்பாடியின் மூவ்-ஆன்லைன் ரம்மிக்கு தடை?- வங்கி கடன் வட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
இந்தியா - கத்தார்

நபிகள் அவமதிப்பு விவகாரம்: இந்தியர்களின் வளைகுடா வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பில் 6 நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 85 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள், ஆண்டுதோறும் 35 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இந்தத் தொகை மூலம் இந்தியாவிலுள்ள நான்கு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் ஆளுங்கட்சியான பா.ஜ.க-வைச் சேர்ந்த இருவர், நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்துகளை வெளிப்படுத்தியதால், வளைகுடா நாடுகள் கொந்தளிப்பில் இருக்கின்றன. குறிப்பாக கத்தார், `இந்தியா பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்' என வலியுறுத்திவருகிறது. இதையடுத்து, வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

தற்போது வரை அப்படியான எந்த விஷயமும் நடக்கவில்லை என்றாலும், இந்த விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில், இப்பிரச்சனை தங்களது வேலைக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சம் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வளைகுடா நாடுகளுடனான உறவில் விரிசல் உண்டானால், இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் மேலும் என்னவாகவெல்லாம் இருக்கும் என்பது குறித்து முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் கூறுவதைப் படிக்க க்ளிக் செய்க...


2
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நகர்வுகள் ஒற்றைத்தலைமைக்கானதா..?

தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தவரை அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துவந்தார். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரானபோது, சட்டசபை நடக்கும் நாள்களைத் தவிர்த்து, மற்ற நாள்களில் பெரிய அளவில் மீடியாக்கள் பக்கம் தலைகாட்டாமல்தான் இருந்தார். ஆனால் சமீப நாட்களாக, தொடர்ச்சியான பத்திரிகையாளர் சந்திப்புகள், அரசுக்கு எதிரான காட்டமான அறிக்கைகள், கடுமையான விமர்சனங்கள் என அதிரடி காட்டி வருகிறார்.

வரும் ஜூன் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிற நிலையில், எடப்பாடியின் இந்த அதிரடி 'மூவ்'க்கு என்ன காரணம் என்பதை படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
சேகர் பாபு

சேகர் பாபுவின் ஆன்மிக அணுகுமுறை: திராவிட மாடல் அரசின் இமேஜுக்கு சாதகமா... பாதகமா?

இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? என்கிற கேள்வி எழும் வகையில் தான் கடந்தகால தமிழக அமைச்சரவை செயல்பாடுகள் இருந்து வந்துள்ளன. ஆனால் சேகர்பாபு அத்துறையின் அமைச்சர் ஆன நாள் முதல் தினமும் செய்தியாகிறது இந்து சமய அறநிலையத்துறை.

அந்தளவு தனது செயல்பாடுகளினால் பெயர் பெற்று வரும் அமைச்சர் மீது நேர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஆதீனங்கள், மடாதிபதிகள், தீட்சிதர்கள், ஜீயர்கள் தரப்பிலிருந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கும் ஆளாகிவருகிறார்.

இத்தகைய நிலையில், சேகர்பாபுவின் ஆன்மிக அணுகுமுறை, முதல்வர் மு.க. ஸ்டாலின் உயர்த்தி பிடிக்கும் திராவிட மாடல் அரசின் இமேஜை டேமேஜ் செய்வதாக, கட்சி சாராத தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர்.

இருதரப்பும் உண்மையில் என்ன நினைக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
RBI

கடனுக்கான வட்டி உயர்வு: எந்தெந்த வங்கிகளில் என்னென்ன வட்டி?

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தைப் போட்டிப்போட்டு உயர்த்த ஆரம்பித்துவிட்டன. இதனால், வீட்டுக்கடன், கார் கடன் உட்பட அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரத் தொடங்கிவிட்டது. இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் மக்கள் கவலைபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதே சமயம் இந்த வட்டி உயர்வு, வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. எந்தெந்த வங்கிகள் என்னென்ன வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன என்பதை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


5
மிஷ்கின்

"சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி..." - மனம் திறக்கும் மிஷ்கின்

"சின்ன வயசுல சினிமா பார்த்ததே இல்ல. என்கிட்ட அசிஸ்டென்ட்ஸ் வாய்ப்பு கேட்டு வர்றங்க பலரும், 'நான் சின்ன வயசில இருந்தே சினிமா பார்க்கறேன் சார்'ன்னு சொல்வாங்க. அம்மா அப்பா சினிமாவுக்கு போறப்ப என்னையும் கூட்டிட்டு போவாங்க. அஞ்சு வயசில இருந்து 12 வயசு வரை நார்மலா ஒரு பையன் பார்க்கற மாதிரிதான் நானும் படங்கள் பார்த்திருக்கேன். ஆனா, சின்ன வயசில இருந்தே கதைகள் நிறைய படிப்பேன். என் பாட்டி நிறைய கதைகள் சொல்வாங்க. அவங்க சொல்லிக்கொடுத்ததை ஒரு வரப்பிரசாதமா பார்க்கறேன்.நான் சினிமாவுக்கு வந்தது..."

மிஷ்கினின் மனம் திறந்த பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க...


6
Online Rummy

ஆன்லைன் ரம்மிக்கு அவசரச் சட்டம் வருகிறது... குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் புதிய குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இக்குழு அளிக்கும் பரிந்துரையைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism