Published:Updated:

மழலையர் வகுப்பும் பல்டியும்-யார் இந்த பாத்திமா ?-திகுதிகு திமுக-'விக்ரம்' நினைவுகள்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 13
Listicle
Vikatan Highlights June 13

மழலையர் வகுப்பும் பல்டியும்-யார் இந்த பாத்திமா ?-திகுதிகு திமுக-'விக்ரம்' நினைவுகள்|விகடன் ஹைலைட்ஸ்


1
அரசுப் பள்ளி மாணவர்கள்

மழலையர் வகுப்புகள் விவகாரத்தில் அரசு பின் வாங்கியது ஏன்..?

கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பலர் பொறுப்புவகித்தனர். என்றாலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள். குறிப்பாக, செங்கோட்டையன் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், அந்தத் துறையில் குளறுபடிகளும் பல்டிகளும் அன்றாட நடவடிக்கைகளாக மாறியிருந்தன.

இந்த நிலையில்தான் தி.மு.க ஆட்சியிலும் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மூடுவிழா நடத்துவது என்கிற அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அ.தி.மு., பா.ம.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, மழலையர் வகுப்புகளை மூடும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற்றிருக்கிறது. என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு என்ன காரணம், இதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விவாதிக்கப்படும் தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
அஃப்ரீன் ஃபாத்திமா ( ட்விட்டர் )

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா... அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது?!

முகமது நபிகள் குறித்துத் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்குப் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக் கருதப்படும் அஃப்ரீன் ஃபாத்திமாவின் தந்தை ஜாவேத் முகமது-வின் வீடு இடிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அஃப்ரீன் ஃபாத்திமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் அஃப்ரீன் ஃபாத்திமா யார்..? இந்த இடிப்பு சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
தி.மு.க தலைமை அலுவலகம் - அண்ணா அறிவாலயம்

நீக்கப்படும் மா.செ-க்கள்?! - திமுக உட்கட்சித் தேர்தல் திகுதிகு

தமிழ்நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் நடந்துவருகிறது. ஜூன் 9-ம் தேதியுடன் ஒன்றியச் செயலாளர்களுக்கானத் தேர்தல் முடிந்துவிட்டது. அதில், பல மாவட்டங்களிலும் பிரச்னைகளுக்குப் பஞ்சமில்லாமல்தான் தேர்தல் நடந்திருக்கிறது என்கிறார்கள். அடுத்தக் கட்டமாக, மாவட்டச் செயலாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது.

கட்சியில் மொத்தமுள்ள 77 மாவட்டங்களை 55 மாவட்டங்களாகக் குறைக்கும் முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தேர்தலை முன்வைத்து அந்தக் கட்சியில் நடக்கும் திகு திகு நிகழ்வுகளைப் படிக்க க்ளில் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
அமித் ஷா

அமித் ஷாவுக்கு நிதிஷ்குமார் கொடுத்த காட்டமானபதிலடி! 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்திய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியொன்றில், "இந்தியாவிலுள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், சோழர்கள், மௌரியர்கள், குப்தர்கள் போன்ற பல பேரரசுகளைப் புறக்கணித்துவிட்டு, முகலாயர்களின் வரலாற்றை மட்டுமே பதிவு செய்ய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்" எனப் பேசி இருந்தார்.

இந்த நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு பீகார் மாநில முதல்வரான நிதிஷ்குமார் கொடுத்துள்ள காட்டமான பதிலடியைப் படிக்க க்ளிக் செய்க...


5
மக்கள் நீதி மய்யம் - கமல்

"திரையில் இருந்தாலும் தலைவர்தான்" - கமல்ஹாசன்

கமல்ஹாசனின் சமீபத்திய 'விக்ரம்' படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு, அவரே எதிர்பாராத ஒன்று. தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து வர இருக்கும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள், விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்துவது குறித்தும் அரசியல் பணி குறித்தும் கமல்ஹாசன், தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சொன்னது என்ன என்பதைப் படிக்க க்ளிக் செய்க...


6
விக்ரம்

"விக்ரம்" -நினைவுகள் பகிரும் ஒளிப்பதிவாளர் ரங்கா

நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், முரளி என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரங்கா. இவர், ரஜினியின் 'ஆயிரம் ஜென்மங்கள் உட்பட 80 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் குறிப்பிடத்தக்கது 1986 ல் வெளியான கமலின் 'விக்ரம்'.

"படத்துல ரிஸ்கி ஷாட்ஸ் நிறைய எடுத்தோம். அந்தக் காலத்துல இண்டோர்ல சில் அவுட் ஷாட்கள் எடுத்திருக்கேன். ஹெலிகாப்டர், கிரேன்னு நிறைய ஷூட் பண்ணியிருக்கேன். கமல் சார் டெக்னிக்கலா ஸ்டிராங்கா இருப்பார். அவர் கையோடு டெக்னிக்கல் எக்யூப்மென்ட்ஸ்களும் கொண்டு வந்திருப்பார். அவரது ஆரம்பக்காலம் தங்கப்பன் சார்கிட்ட டான்ஸ் அசிஸ்டென்ட் ஆக இருக்கும்போது எனக்கு நட்பானார். அப்ப நானும் உதவி ஒளிப்பதிவாளர். கமல் ஸ்டோரி போர்டு இல்லாமல் ஷூட் வர மாட்டார். அவர் தயாரிக்கற படங்கள்ல அன்னிக்கு என்ன எடுக்கப்போறோம்னு எல்லாருக்குமே தெளிவா தெரியும்" என ஒளிப்பதிவாளர் ரங்கா சொல்லும் 'விக்ரம்' நினைவுகளை மேலும் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism