
அமைச்சர் உதயநிதி - 'அப்செட்' வெங்கடேஷ் பட் - அடடா 'விக்ரம்' |விகடன் ஹைலைட்ஸ்
கார்த்திக் கோபிநாத் கைது!
யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கோயில் நிதி கையாடல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரின் கைதுக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்களை விரிவாக படிக்க க்ளிக் செய்யவும்...

உதயநிதியை அமைச்சராக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்... போட்டிப் போட்ட அமைச்சர்கள்!
சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க., மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென சிறப்புத் தீர்மானம் இயற்றினர். விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவிருக்கிறது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அமைச்சர்கள் இயற்றியுள்ள இந்தத் தீர்மானம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
கிண்டல், கேலி... செய்பவர்களைக் கேள்வி கேட்கும் `குக்கு வித் கோமாளி' வெங்கடேஷ் பட்!
'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக வரும் வெங்கடேஷ் பட் பேசிய ஒரு வீடியோதான் சமீபத்திய வைரல். அவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடம் பேசியதை சமூக வலைதள பக்கங்களில் சிலர் அதனைக் கிண்டல் செய்தும், சிலர் அதனை ஆதரித்தும் பதிவிட்டு வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
36 years of vikram: - நினைவுகள் பகிரும் லிசி!
கமல், சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி, அம்பிகா நடித்த `விக்ரம்' வெளியாகி 36 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் முதன்முறையாகக் கம்ப்யூட்டர் வசதியுடன் இசைக்கப்பட்ட படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.
அதிலும், 'ஏஞ்சோடி மஞ்சக்குருவி பாட்டு...' ரசிகர்களுக்கே எவர் க்ரீன் ஸ்வீட் மெமரி என்றால், அதில் நடித்த லிசிக்கு கேட்கவா வேண்டும்..?

DON: இதுவரை வெளிவராத சுவாரஸ்யமான ரகசியங்கள்!
சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரிலீஸாகி, வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘டான்.’
‘டான்’ கதையை உருவாக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, முதலில் சிவகார்த்திகேயனை அணுகினார். சிவாவுக்குப் பிடித்திருந்தாலும், லைகா நிறுவனத்துக்குக் கதை கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதனால், ‘வேறு இயக்குநரைப் பார்க்கலாம்’ எனத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
'டான்' படம் குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்யமான ரகசியங்களை மேலும் படிக்க க்ளிக் செய்க...