சாதிக்கட்சி முத்திரை... அன்புமணியின் 2.0 -மோடி ஆட்சி- மம்தா சவால்- தங்கருடன் ஜி.வி|விகடன் ஹைலைட்ஸ்

சாதிக்கட்சி முத்திரை... அன்புமணியின் 2.0 -மோடி ஆட்சி- மம்தா சவால்- தங்கருடன் ஜி.வி|விகடன் ஹைலைட்ஸ்
சமீப ஆண்டுகளாக பா.ம.க-வுக்கு அரசியலில் தொடர்ந்து இறங்கு முகம்... கட்சியின் முகமாக பார்க்கப்படும் அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், இதனால் ரொம்பவே நொந்து போனார். வயோதிகம், கொரோனா போன்ற காரணங்களால், முன்பு போல் அவரால் அரசியலில் தீவிரமாக செயல்படாமல் போனது, கூட்டணி விஷயத்தில் பா.ம.க மீதான அவப்பெயர் போன்றவற்றால் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
இதனால், 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதனைத் தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளால், பா.ம.க. நிர்வாகிகளும் அப்செட்.
இதனால் கட்சி நிர்வாகிகளில் பலர், ஆளும் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தாவினர். அதிலும் உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவிடம் விலைபோனதாக ராமதாஸே குற்றம் சாட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ம.க-வின் பழைய செல்வாக்கை நிரூபிக்க முடியாமல் போனால், அது முதலுக்கே மோசமாகி விடும் என்ற எண்ணத்தில்தான், இளைஞரணித் தலைவராக இருந்த தனது மகனை கட்சியின் தலைவராக அறிவித்துள்ளார் ராமதாஸ்.
"அரசியலுக்கு நேற்று வந்த பா.ஜ.க அண்ணாமலை, தி.மு.க-வுடன் மல்லுக்கட்டும் நிலையில், உங்களால் முடியாதா..?" என்ற உசுப்பேத்தலுடன்தான் அன்புமணி ராமதாஸ் களம் இறக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.

'சான்றிதழில் சாதி இல்லை என்பதால் சாதி ஒழிந்துவிடாதுதான்; ஆனால்...'
"கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களை குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்று 1972 அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் என யாரிடமும் விழிப்புணர்வு இல்லை" எனச் சொல்லும் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் - காயத்திரி தம்பதியர், தங்களது குழந்தைக்கு 'சாதி, மதம் சாராதவர்’ என்ற சான்றிதழை வாங்கியுள்ளனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
8 ஆண்டு ஆட்சி... என்ன சொல்கிறார் பிரதமர் மோடி
பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக இமாச்சலப் பிரதேசத்துக்கு இன்று வருகை புரிந்தார் பிரதமர் மோடி. இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடைபெற்ற விழாவில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் மோடி நேரடியாகவே கலந்துரையாடினார்.
அப்போது தனது தலைமையிலான பா.ஜ.க-வின் 8 ஆண்டுக்கால ஆட்சி குறித்து பிரதமர் மோடி தெரிவித்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2024 மக்களவைத் தேர்தல்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். `காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடலாம். இப்போதைக்கு நேர்மறையாகவும், அமைதியாகவும் அடுத்து வரும் தேர்தல் பற்றிச் சிந்திப்போம்' என அண்மையில் மம்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலை முன்வைத்து பாஜக-வுக்கு சவால் விடுத்துள்ளார் மம்தா. அந்த சவால் என்ன..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...

தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் - வைரமுத்து இசைக் கூட்டணி!
தங்கர் பச்சான் அடுத்து இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்தில் ஜி.வி.பிரகாஷ் - வைரமுத்து இசைக் கூட்டணி இடம் பெறுகிறது. கூடவே இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனனுடன் யோகி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள்.

மருத்துவக் காப்பீடு: தவறான நம்பிக்கைகளும் சரியான விளக்கங்களும்..!
தவறான நம்பிக்கை 1: நான் இளைஞன். ஆரோக்கியமாகத்தானே இருக்கேன். எனக்கு மருத்துவக் காப்பீடு தேவையில்லையே...
சரியான விளக்கம்: பலரும் இப்படித்தான் நினைக் கிறார்கள். மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசு, கலப்பட உணவு போன்றவற்றால் நல்ல உடல்நலத்துக்கும் வயதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் பணிச்சுமை, மன அழுத்தம், உடல் பருமன் பிரச்னை உள்ளிட்டவற்றால் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். மேலும், விபத்து என்பது எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். நாம் சாலையில் மிகச் சரியாக வாகனம் ஓட்டிச் சென்றாலும் எதிரில் வருபவர்கள் அல்லது நம் பின்னால் வருபவர்கள் சரியாக வாகனம் ஓட்டவில்லை எனில், பாதிப்பு நமக்குத்தான். எனவே, இளம்வயதாக இருந்தாலும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும். இளம் வயதில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும் என்பது முக்கியமான விஷயம்.
தவறான நம்பிக்கை 2: அலுவலக மருத்துவக் காப்பீடு இருக்கே, அது போதாதா..?
சரியான விளக்கம்: கார்ப்பரேட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களின்கீழ் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு பாலிசிகளை அளிக்கின்றன. சில நிறுவனங்கள்...