"ரஜினிக்கு என் பதில் என்ன?" - கமல்ஹாசனின் விரிவான விளக்கம்

வணக்கம். நான் கமல்..!

செவாலியே சிவாஜி அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் ரஜினி அவர்கள் பேசியதற்கான என் விளக்கம் விகடனின் இந்த இதழில் வெளிவந்திருக்கிறது. ‘ரஜினிக்குக் கமல் சூளுரை’ பாணி விளக்கம் அல்ல. அதை அவரும் அப்படி எடுத்துக்கொள்ளமாட்டார். அரசியலில் எது வெற்றி என்பது குறித்த என் புரிதலாக அந்த விளக்கம் இருக்கும்..!

 

சிலரிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன எனக்கு!

  • * நீங்கள் ஜி.எஸ்.டிக்குக் கொடுத்த முன்னேற்பாடும் முன்னறிவிப்பும் முக்கியத்துவமும் ‘நீட்’டுக்கும் கொடுத்திருக்க வேண்டாமா?
  • ஒன்றுமே தெரியாத மூன்று தலைமுறையாகப் படிப்பறிவு மறுக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை அனிதா ப்ளஸ்-டூவில் 1,176 மதிப்பெண் வாங்குகிறார் என்றால், அவளுக்கு ’நீட்’ கஷ்டமாகிவிடுமா என்ன?
  • போதும் பொறியாளர்கள்! உலகத் தேவைக்கான பொறியாளர்களைத் தமிழ்நாடே உற்பத்தி செய்துவிட்டது. ஆனால், அடிப்படைப் பணிகளுக்கான திறமையும் ஆளுமையும்கூட இங்கே ஏன் தட்டுப்பாடாக இருக்கின்றன?

 

என்னை நோக்கிப் பாயும் இந்தக் கேள்விகளுக்கு என் பதில் என்ன?

  • ”கறுப்புச் சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க” என்று டெல்லியிலிருந்து உனக்கு உத்தரவு வந்திருக்கிறதா?
  • ஜெயலலிதா இறந்தபிறகே, ‘இந்த ஆட்சி வேண்டாம் வேண்டாம்’னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே?

  • இந்து மதம் தவிர மற்ற மதங்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லையே நீங்கள்?

இந்தக் கேள்விகளுக்கான என் பதில்… இங்கு!  

 

தெரியுமா?!

ஒருவாரமாகக் கடும் காய்ச்சல். வழக்கமான காய்ச்சல்தான். சென்னை நகரவாசிகளுக்குப் பழகிப்போன காய்ச்சல். இங்கு சாதி மத பேதமின்றி அரசாங்க உதவியுடன் தவறாமல் வருடா வருடம் விநியோகிக்கப்படுவது தொற்றுநோய்தான். சென்னையில் ஓர் ஆறு சாக்கடையாறாகவே மாறிவிட்டது. அந்தச் சாக்கடையாறு எது தெரியுமா?

 

 அவர்களது ஆட்சி, அவர்கள் அம்மா. படத்தை வைத்துக்கொள்ளட்டும். ஆனால், தயவுசெய்து ‘அவர்’ படத்தை மட்டும் அங்கே வைக்காதீர்கள், எடுத்துவிடுங்கள். அதற்கு உடந்தையாக இருந்தோம் என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், ஏதோ அவரும் உடந்தை என்பதைப்போல அவர் படத்தை வைத்திருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை.

நான் யாரைக் குறிப்பிடுகிறேன்… கணிக்க முடிகிறதா?!  

 

 

கமலின் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ அத்தியாயம் வெளிவந்த ஆனந்த விகடன் இதழைப் பெற http://bit.ly/KamalinAV 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!