காலா பற்றிய 8 ரகசியங்கள்! - ஆனந்த விகடன் பேட்டியில் பா.இரஞ்சித் #KaalaInAV | 8 Secrets about Kaala - Pa. Ranjith Interview in Ananda Vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (28/02/2018)

கடைசி தொடர்பு:11:24 (28/02/2018)

காலா பற்றிய 8 ரகசியங்கள்! - ஆனந்த விகடன் பேட்டியில் பா.இரஞ்சித் #KaalaInAV

அரசியல் என்ட்ரி, கேங்ஸ்டர் சினிமா, 2.0 என 3டி எதிர்பார்ப்பில் இருக்கிறார் ரஜினி. அதில் ஒன்றான ‘காலா’ பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் படங்கள் எதிர்வரும் ஆனந்த விகடன் இதழில் இடம்பெறுகிறது. அதில் ‘காலா’ இயக்குனர் பா.இரஞ்சித் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் பற்றி ஒரு டீசர் கட் இங்கே...  

Kaala

1) மும்பை தாராவியில் கள ஆய்வு மற்றும் திரைக்கதை இறுதி வடிவமைப்புக்குப் பின் மும்பை  கேங்க்ஸ்டர் கதையைத்தான் எழுதிக் கொண்டு வருவார் இரஞ்சித் என ரஜினி எதிர்பார்த்திருக்க, இயக்குநர் விவரித்ததோ... ரஜினியே எதிர்பாராதது! அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷன், ”இப்படி ஒண்ணை நான் எதிர்பார்க்கவே இல்லையே டைரக்டர் சார். ஆனா நல்லா இருக்கு!” அப்படி என்ன சொன்னார் இரஞ்சித்? 

2) ’கபாலி’க்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது படத்தை இயக்கும் படத்தை இரஞ்சித்துக்கு எப்படி கொடுத்தார் ரஜினி? இதை இரஞ்சித்தே ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி சொன்ன பதில்..?! 

3) ’காலா’-வுக்கு மூன்று பெயர்க்காரணங்கள்.. அவை என்ன? 

4) படத்தில் ரஜினி காதாபாத்திரத்தின் பெயர் காலா சேட்டு. அவர் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக வருகிறார்? படத்தில் ரஜினியின் மனைவி பெயர் செல்வி. ‘செல்வி’யாக நடித்திருப்பவர் யார்? 

kaala

5) ’கபாலி’யைப் பற்றிய நியாயமான விமர்சனமான இரஞ்சித் சொல்லும் அந்த விஷயம்... ஒவ்வொரு ரஜினி ரசிகனும்.... சினிமா அபிமானியும் முழு மனதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்! 

6) பிரதான காட்சிகள் மும்பை தாராவியிலேயே படமாக்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக சென்னையில் ‘தாராவி’ செட் அமைக்கப்பட்டது. அதற்கு எவ்வளவு செலவானது? 

7) ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்து காலாவில் வசனங்கள்/காட்சிகள் இருக்குமா? நச்சென தெளிவுப்படுத்தியிருக்கிறார் இரஞ்சித்!

8) ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழவைச் சேர்ந்த ஒருவருக்கு ‘காலா’வில் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இரஞ்சித். அவர் யார்... கணிக்க முடிகிறதா? 

இந்த வார ஆனந்த விகடன் இதழில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’காலா’ எக்ஸ்க்ளூசிவ் பேட்டியைத் தவறவிடாதீர்கள்!