`வட சென்னை’ பற்றிய 8 ரகசியங்கள் - ஆனந்த விகடன் பேட்டியில் வெற்றிமாறன் #VadaChennaiInAV

பொல்லாதவன்.. ஆடுகளத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனும் தனுஷூம் இணையும் அடுத்த வேட்டைக்களம் ‘வட சென்னை’. ’வட சென்னை’ பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் படங்கள் எதிர்வரும் ஆனந்த விகடன் இதழில் இடம்பெறுகிறது. அதில் இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பற்றி ஒரு டீசர் கட் இங்கே...

1) வடசென்னை 35 வருஷ வாழ்க்கையின் கதை.. அதனால் சில பாகங்களாக வருகிறது. ஜூனில் வருவது முதல் பாகம்தான். 


2) வடசென்னையின் மூலக்கதையை 80 பக்க நோட்டில் எழுதிக் கொடுத்த அந்த நபரை எப்படி சந்தித்தார் வெற்றிமாறன்? அந்த விறுவிறு சம்பவத்தை பேட்டியில் சொல்லிருக்கிறார். 


3) தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி என ஒரு பட்டாளமே இறங்கியிருக்கும் இந்தக் கதையில ஹீரோவும் இல்லை. வில்லனும் இல்லை.


4) ‘அன்பு’ தனுஷ், ‘ராஜன்’ அமீர், ‘குணா’ சமுத்திரக்கனி, ‘சந்திரா’ ஆன்ட்ரியா, ‘பத்மா’ ஐஷ்வர்யா ராஜேஷ். 


5)  இந்தப் படத்தில் தனுஷ் உலகச் சாம்பியன் ஆக நினைக்கும் நேசனல் லெவல் கேரம் ப்ளேயர்.


6) ‘பட்ஜெட் அதிகமாயிடுச்சுனா யூஸ் ஆகும்ல, ரெண்டு கமர்சியல் படம் பண்ணிட்டு வந்துடுறேன்’னு சொல்லிட்டு போய் சில படங்களை முடிச்சுட்டு வந்தாராம் தனுஷ். 


7) நான்கு பாட்டு… ஒரு ஒரிஜினல் கானா பாட்டு. ஏகப்பட்ட ஃபுட்டேஜ். சிஸ்டமே ஹேங் ஆகி, ஒரு வாரம் கழிச்சுதான் வந்ததாம். 


8) ஒரு தலைவரின் மரணம், கட்சி ரெண்டா உடையறப்போ ஏற்படக்கூடிய மாற்றம்… இப்படி சில அரசியல் விஷயங்கள் படத்துல இருக்கு. 


’வட சென்னை’ பேசப்போகும் அரசியல் என்ன? இப்படி ஒரு படம் பண்ணலாம்னு வெற்றிமாறன் சொன்னதும் தனுஷ் ரியாக்ஸன் என்ன? ’வட சென்னை’ ஆரம்பித்ததிலிருந்து மாறாத ஒரே ஆர்டிஸ்ட் யார்? எத்தனை பாகங்களா பண்ற ஐடியா? எல்லாக் கேள்விகளுக்கும் இந்த வார ஆனந்த விகடனில் விரிவான பதிலளித்திருக்கும் வெற்றிமாறனின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டியைத் தவறவிடாதீர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!