உங்களில் யார் எலெக்‌ஷன் ஸ்டார் ? - ஒரு குயிக் சர்வே | Survey about parliament election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (14/02/2019)

கடைசி தொடர்பு:18:08 (14/02/2019)

உங்களில் யார் எலெக்‌ஷன் ஸ்டார் ? - ஒரு குயிக் சர்வே

உங்களில் யார் எலெக்‌ஷன் ஸ்டார் ?  - ஒரு குயிக் சர்வே

வரப்போகிறது நாடாளுமன்றத் தேர்தல்!

பட்ஜெட்டில் ‘பளபள’ அறிவிப்புகள்... பிரமாண்ட மாநாடுகள்... கூட்டணிப் பேச்சுவார்த்தை களேபரங்கள் என இப்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது அரசியல் களம். உங்கள் மனதில் இப்போதிருக்கும் ஒரே கேள்வி, `2019 நாடாளுமன்றத் தேர்தலை வென்று அரியணையில் அமரப்போகும் அந்தப் பாகுபலி யார்?’ இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இந்தப் புதிருக்கு விடை தேடும் சுவாரஸ்யத்தில், உங்களுடன் இணைய விரும்புகிறது விகடன். 

‘கிராமங்கள் யார் பக்கம்?’, ‘இளைஞர்களின் தலைவர் யார்?’ என்று பல்வேறு தலைப்புகளில் சர்வேக்கள் நடத்தி வாக்காளர்களின் பல்ஸ் பிடிப்பது... `மெகா தேர்தல் போட்டி!’ நடத்தி வாசகர்களின் அரசியல் நுண்ணறிவை சோதிப்பது... ‘என்ன செய்தார் எம்.பி?’ என ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடி விசிட் செய்து ரிப்போர்ட் கார்டு தருவது... கூட்டணி சலசலப்பு, உள்கட்சி கும்மாங்குத்து எனத் தேர்தல் கள நிலவரங்களைத் துரிதமாகவும் துல்லியமாகவும் தருவதுதான் விகடன் ஸ்டைல். அதில் இப்போது உங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறான் விகடன். வழக்கமான பரிசுப் போட்டி தவிர, தேர்தல் செய்திகளை நீங்களே விகடன் மூலம் உலகத்துக்குச் சொல்லலாம்.  

#Election2019 என்ற இந்தப் பிரமாண்ட ஜனநாயகத் திருவிழாவை, உங்களுடன் சேர்ந்து எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டிருக்கிறான் விகடன். இந்தத் தேர்தலுக்கு விகடனிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? நீங்கள் எப்படி பங்களிக்க விரும்புகிறீர்கள்? உங்கள் எண்ண ஓட்டங்களைத் தெரிந்துகொள்ளத்தான் இந்த சர்வே.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close