வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (30/11/2017)

கடைசி தொடர்பு:11:08 (01/12/2017)

``நாடு இருந்தாதானே விற்க முடியும்!" மோடி பதிலுக்கு மக்கள் கருத்து #VikatanSurveyResult

மோடி

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக, அந்த மாநில ஆளும் கட்சியான பி.ஜே.பி-யும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியைத் தேநீர் கடைக்காரர் என்று கிண்டலடித்து காங்கிரஸ் கட்சி வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவுக்குப் பதிலளித்த மோடி, "நான் சிறுவயதில் டீ விற்றவன்தான்; நாட்டை விற்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. அந்தச் சர்வேயில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர், ''இது மோடி தேர்தல் நேரத்துக்காகப் பேசிய டயலாக்தான்'' என்று கூறியுள்ளனர். மேலும்,சர்வேயில் கேட்கப்பட்ட மற்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

 

4) பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு உங்கள் அறிவுரை...

*மோடியோ.. ராகுலோ... மக்களைப் புதிய திட்டங்களால் நோகடிக்காமல் இருந்தால் சரிதான்.

*சாதாரண மக்கள் நிலைமையைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

*Modi, let your voice be against even your party cadres when they do something that taints image of india in the global arena.

*Rahul, please don't become president of Congress. By doing so, you are actually helping BJP win election. Leave it to someone who is more matured.

*இருவரும் முடிந்தால் நல்லது செய்யுங்கள் அல்லது ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

*பிரதமர் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் முன் அதற்கான முன்மாதிரிகளைச் செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.

*ராகுல், அரசைக் குறைகூறும் முன் அவர்களது ஆட்சியில் இந்தியாவின் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

*மோடி ஜி கொஞ்சம் ஏழைகளைப் பாருங்கள்...கார்ப்பரேட் கம்பனி மட்டும் முன்னேறினால் போதாது ...

*இந்திய மக்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த யாரையாவது நம்புகிறார்கள். ஆனால், எப்போதும் ஏமாற்றம் அடைவதே வாடிக்கை.

*இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டுப்போட வேண்டாம்னு மக்களுக்குத்தான் அறிவுரை வழங்க வேண்டும்... இவர்களுக்கு அல்ல...

*நடுத்தர மற்றும் கடைநிலை மக்களை நினைத்துச் செயல்படுங்கள்... அதுவே, உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

*யாரு வெற்றி பெற்றாலும் ஏழைகளையும், விவசாயிகளையும் கஷ்டப்படுத்த வேண்டாம்.

*மோடி - இன்னும் பக்குவப்படணும். ராகுல் - இன்னும் வளரணும்.

*மோடி, தமிழ்நாட்டு உரிமைகளில் தலையிடக் கூடாது. உதாரணமாக எரிவாயு திட்டங்களில். ராகுல், மோடியின் தலைமைப் பண்பைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

*Avoid personal comments. Be matured. Address issues faced by people.

*do some real things to agriculture that really helps Indian farmers

*மோடி முதல்வராக இருந்தபோது ஜி.எஸ்.டி-யையும் ஆதாரையும் எதிர்த்து கருத்துகள் சொன்னார். பிரதமர் ஆனவுடன் அப்படியே பல்டி அடித்துவிட்டார். ராகுல் பொறுப்புக்கு வரட்டும்... விமர்சிக்கலாம். 

*பிரதமர் நம் மக்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் துணைத் தலைவர் இன்னும் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.

*Do not criticize others, instead, focus on development and support each other. Provide constructive criticism and please avoid caste based politics. Bring an END to that.

*தனிநபர் விமர்சனம் அரசியலுக்கு அழகல்ல.. ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ மக்களுக்குப் பயன்படும் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 

*நீங்கள் உட்கார்ந்திருப்பது அரசு ஆசனம்.. இதைக் கருத்தில்கொண்டு தயவுசெய்து உங்கள் சேவையைச் செய்யுங்கள்.

*பிரதமர் மோடி, உடனடியாக அரசைக் கலைத்துவிட்டு டீ விற்கச் செல்லட்டும். ராகுல் பொதுவெளியில் இன்னும் தன்னை நிலைநிறுத்த வேண்டும். பொருளாதாரக் கொள்கைகளில் சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க