குஜராத் தேர்தலில் வெற்றிபெற்ற பி.ஜே.பி... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி

 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி இந்த முறையும் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பி.ஜே.பி-க்குப் பின்னடைவு ஏற்படும் என எதிர்க் கட்சிகளால் கருதப்பட்ட வேளையில், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மீண்டும் வெற்றிபெற்றிருக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியும் இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-க்குக் கடும் போட்டியாக வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்ததும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவில் வாக்களித்ததும் குஜராத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள். குஜராத் தேர்தல் பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்ய சர்வேயில் கலந்துகொள்ளுங்கள்.

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!