ரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey #Rajinikanthpoliticalentry

ரஜினி

னது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளான இன்று உறுதி படுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 1996லிருந்து அவரது அரசியல் அறிவிப்புக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான விடை கிடைத்துள்ளது. கூடவே வரவிருக்கும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசியல் சில கட்சிகளாலும் அதன் தலைமைகளாலும் சீரழிந்து இருப்பதாகவும் அதனை அடித்தளத்திலிருந்து மாற்றி அமைக்கவேண்டியது  கடமை என்றும் ரசிகர்களிடையே பேசி இருக்கிறார். ரஜினியின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தவண்ணம் இருக்கின்றன.இதுபற்றி உங்கள் கருத்து என்ன? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துக்கணிப்பில் பதிவு செய்யவும். 

 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!