"நீட்டால் இன்னொரு அனிதா இறக்காமல் இருந்தால் போதும்" - மக்கள் கருத்து! #VikatanSurveyResult | People opinion about NEET exams #VikatanSurveyResult

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (27/01/2018)

கடைசி தொடர்பு:08:35 (27/01/2018)

"நீட்டால் இன்னொரு அனிதா இறக்காமல் இருந்தால் போதும்" - மக்கள் கருத்து! #VikatanSurveyResult

நீட் தேர்வு

'நீட் தேர்வு' என்ற ஒற்றை வார்த்தை கடந்த ஓர் ஆண்டாகவே தமிழ்நாட்டை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கான போராட்டத்தின் ஒருபகுதியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...

நீட் தேர்வு சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

 

4) நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்தை ஓரிரு வார்த்தைகளில் குறிப்பிடவும்...

*குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படவேண்டும்

*தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

*Everyone should prepare themselves for neet

*மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியம் தான், ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படிதான் நடத்த வேண்டும் என்று அவசியமில்லை.

*Organised attack on quality of medical Education in Tamilnadu.

*பணம்தான் ஒருவரின் கல்வியை நிர்ணயிக்கிறது.

*இன்னொரு அனிதா இறக்காமல் இருந்தால் போதும்

*NEET exams will bring out the best in the students.

*மாநில வாரியான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் உருவாக்கப்பட வேண்டும்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்