"அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே" - சீமான் சரத்குமார் கூட்டணிக்கு மக்கள் ரியாக்‌ஷன்! #VikatanSurveyResult

சீமான் சரத்குமார் கூட்டணி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் மதுரை விமான நிலையத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் இருவரும், ''இனிமேல் தமிழகத்தின் நலன்கருதி பல்வேறு பிரச்னைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம்'' என்று அறிவித்தனர். இதுகுறித்து விகடன் இணையதளத்தில், 'சீமான் - சரத்குமார் கூட்டணி... தமிழனே உன் கருத்து என்ன' என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதற்குப் பலவிதமான கருத்துகள் பதிவிடப்பட்டன. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ள கீழே படியுங்கள்...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

4) சரத்குமாரை சீமானின் தம்பிகள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து உங்கள் கருத்தை எழுதவும்...

*கண்டிப்பாக இல்லை. அவர் அரசியல் நிலைப்பாடுகள் சீமான்போல நிலையாக இருப்பதில்லை..

*அவரவர் விருப்பம் 

*ரஜினி கமலுக்கு பதிலா இவங்க பரவாயில்லை 

*அண்ணன் எவ் வழியோ தம்பிகளும் அவ்வழியே

*ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..ஏனென்றால் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனி ஆளாக அரசியல் செய்து கொண்டிருப்பவர், அது மட்டுமல்லாமல் தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பவர், ஆனால் சரத்குமார் திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் மாறி மாறி சவாரி செய்து அரசியல் என்கிற பெயரில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

*சரத்குமாரை நாம் தமிழர் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

*தமிழ் தேசிய கருத்து அரசியல் நோக்கம் கொண்டவர்கள் ஒரு புள்ளியில் இணைய வேண்டிய நேரம் இது.

*நிச்சயம் ஏற்க மாட்டார்கள்...இது ஒரு சாதி அரசியல் என்ற எண்ணம் இளைஞர்களிடையே எழும்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னூட்டமாக இடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!