"மக்கள் நீதி மய்யம்" உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? #VikatanSurvey

மக்கள் நீதி மய்யம்

டிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டு, மதுரை ஒத்தக்கடை பொதுக் கூட்டத்தில் முழங்கினார். "மாணவர்களுக்கு நல்ல, தரமான கல்வி கிடைக்க வேண்டும். சாதி, மதம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதெல்லாம் தனி ஒருவனாக என்னால் செய்ய முடியாது. நீங்களும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவீர்களா?" என்று பொதுக்கூட்டத்தில் இருந்த மக்களிடம் கேட்டார். தன்னுடைய கட்சி கொள்கைகளைப் பற்றி விளக்கினார் கமல்ஹாசன். பின்னர், மக்களால் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கும் மேடையிலேயே பதில் கூறினார். இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பான தங்கள் கருத்துகளைப் பகிர வேண்டுகிறோம். 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!