'போலீஸ்' பற்றி ரஜினி கருத்து... உங்கள் கருத்து என்ன?! #VikatanSurvey

'போலீஸ்' பற்றி ரஜினி கருத்து... உங்கள் கருத்து என்ன?! #VikatanSurvey

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காவிரிப் போராட்டங்கள் நடந்துவரும் இந்தச் சூழ்நிலையில், கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால், திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. போட்டி நாள் அன்று அதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸ்காரர் ஒருவரை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கினார். இதுபற்றிக் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி, ``சீருடையில் இருந்த காவலர்கள்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே பேராபத்து. இவர்கள்மீது கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்'' என்றார். இது, பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பான இந்தச் சர்வேயில் பொதுமக்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுகிறோம்.

ரஜினி 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!