வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (27/05/2018)

கடைசி தொடர்பு:11:32 (05/06/2018)

``மக்களைக் கொலை செய்ய அதிகாரம் உள்ள அரசுக்கு ஆலையை மூட அதிகாரம் இல்லையா?" #VikatanSurveyResult

``மக்களைக் கொலை செய்ய அதிகாரம் உள்ள அரசுக்கு ஆலையை மூட அதிகாரம் இல்லையா?

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியபோது, நிலைமை தலைகீழாக மாறியது. அன்றைய தினம் போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது, ஆயிரக்கணக்கான போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தடியடி நடத்தினர். வரலாறுகாணாத வகையில் கண்மூடித்தனமாக போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எந்தவொரு சரியான பதிலையும் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 'விகடன்' இணையதளத்தில் "ஸ்டெர்லைட் போராட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையாண்டவிதம் பற்றி உங்கள் கருத்து!?" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதில், போராட்டத்தில் இருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது 'அரசு மக்களுக்குச் செய்த அநீதி' என்ற பதிலை சர்வேயில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளார். போராட்டம் நடத்திய மக்களை நேரில் சந்தித்து முதல்வர் பேசியிருந்தால், இந்தப் போராட்டம் 100 நாள்கள் வரை தொடர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்காகவும், அடுத்த தலைமுறையின் நலனுக்காகவும் போராடினார்கள். 'இந்தப் போராட்டத்தின் தொடக்கத்திலேயே முதல்வர் இதுகுறித்து மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால், போராட்டம் முடிந்திருக்கலாம்' என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே... 

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

 

 

4. 12 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ் மற்றும் அதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

  • போலீஸ்காரர்களைக் கைது செய்ய வேண்டும் ஸ்டெர்லைட்டையும் மூட வேண்டும்
  • ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற முடிவை அரசு முன்பே எடுத்து, அதை மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.. அமைதியான போராட்டத்துக்கு அனுமதி அளித்துவிட்டு ஊர்வலப் பாதையை தடுத்து நிறுத்தி இருக்கக் கூடாது, ஊர்வலத்தை திடீரென தடுத்ததும் அரசின் மௌனமுமே கலவரத்துக்குக் காரணம்.
  • ஆலையை மூடுவதற்கு அரசின் உடனடி உத்தரவு ஒன்றே தீர்வு.
  • Appoint Sagayam IAS to investigate this case because I assume State and central Government involved in this shooting order.
  • It is fault of government. Government betrayed it's own people.
  • ஆலையை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டக்காரர்களிடம் முதல்வர் நேரடியாகச் சென்று மன்னிப்புக் கேட்கவேண்டும்.
  • Block the main essential sources to the factory like Electricity, Water, Fuel, etc.,
  • மக்களைக் கொலை செய்ய அதிகாரம் உள்ள அரசுக்கு ஆலையை மூட அதிகாரம் இல்லையா? 
  • ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்...முதல்வருக்கு மக்களைக் சந்திக்க நேரமில்லையா?
  • இறந்தவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே நிரந்தரமாக மூட வேண்டும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்