தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த்... உங்கள் கருத்து? #VikatanSurvey

ரஜினி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வது நாளான மே 22-ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் மீதும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்ற நிலையில் சம்பவம் நடந்த தூத்துக்குடி நகருக்கு நடிகர் கமல்ஹாசன், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (30.5.2018) தூத்துக்குடி சென்றார். சென்னையில் இருந்து புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ``தூத்துக்குடி மக்கள் நடிகரான என்னைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றார்.

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!