வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (05/06/2018)

கடைசி தொடர்பு:11:30 (05/06/2018)

``திரு.ரஜினி யாரை சமூக விரோதி என்கிறார்?" #VikatanSurveyResult

தூத்துக்குடி

துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு ரஜினிகாந்த் கடந்த 30-ம் தேதி தூத்துக்குடி சென்றிருந்தார். அங்குச் செல்வதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது, "தூத்துக்குடி மக்கள் நடிகரான என்னைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்" என்று கூறியிருந்தார். அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, 'தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள். அதனால்தான், போராட்டம் வன்முறையாக முடிந்தது' என்றார். மேலும், 'எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டம் என்று போனால், தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்' என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. 'பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே சந்தித்துவிட்டு வந்த ரஜினி யாரை இங்கு சமூக விரோதி என்கிறார்' என்ற கேள்வியைக் கேட்கின்றனர் சர்வேயில் பதிலளித்தவர்கள். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள், ரஜினி

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

5) தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வாரம் முடிந்த பின்னர், ரஜினிகாந்த் இப்போது அங்கு சென்றது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஓர் அரசியல்வாதி உருவாகிறார். அவ்வளவுதான்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து ஒரு வாரம் முடிந்த பின்னர், ரஜினிகாந்த் இப்போது அங்கு சென்றது அபத்தமானது.

தாமதிக்காமல் செயல்படுவதே நல்லது... இன்னும் வேகம் வேண்டும்

இவரை யாரும் அழைக்கவில்லை. அவர் இங்கு வரவேண்டிய அவசியமும் இல்லை.

'காலா' புரோமோஷன்... குருமூர்த்தி தூண்டுதல்...

இவருக்கும்   BJP க்கும் ஒரு வித்தியாசம் கிடையாது. தூத்துக்குடி மக்கள் ஏமாந்துவிடவேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே சந்தித்துவிட்டு வந்த ரஜினி யாரை இங்கு சமூக விரோதி என்கிறார்.

ஒருவகையில் நீங்கள் கூறியது உண்மைதான். ஒரு நடிகனாக உங்களைப் பார்த்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தயவுசெய்து கடைசிவரை ஒரு நல்ல நடிகனாகவே இருந்துவிடுங்கள் ரஜினி. சினிமாவுக்காக உங்கள் பெயரை மாற்றியதைப்போல் அரசியலுக்காக உங்கள் சுயத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். தமிழகத்தை விட்டுவிடுங்கள்...

தமிழர் பிரச்னைகளில் ரஜினிக்கு அக்கறை உண்டு. ஆனால், அவரது தூத்துக்குடி பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டதே.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க