வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (04/10/2018)

கடைசி தொடர்பு:16:50 (04/10/2018)

`திருமணத்துக்கு வெளியிலான உறவு குற்றமல்ல' - உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு மக்களின் ரியாக்‌ஷன்! #VikatanSurveyResults

`திருமணத்துக்கு வெளியிலான உறவு குற்றமல்ல' - உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு மக்களின் ரியாக்‌ஷன்! #VikatanSurveyResults

``திருமணமான பெண்ணுடன் கணவரைத் தவிர வேறோர் ஆண், கணவரின் அனுமதியின்றியோ, தெரியாமலோ உறவு கொண்டால், அந்த ஆணுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். பெண்ணுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது" என வகுக்கப்பட்டிருந்த சட்டப்பிரிவு 497ஐ நீக்கம் செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி திருமணம் தாண்டிய உறவு, இனி கிரிமினல் குற்றம் கிடையாது. ஆனால், விவாகரத்து பெறுவதற்கு அதை ஒரு காரணமாக எடுத்துகொள்ள முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பற்றி மக்களின் கருத்து கேட்டு சர்வே நடத்தப்பட்டது. இதில் 61.6 சதவிகிதம் பேர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதாகவும், 30.5 சதவிகிதம் பேர் தீர்ப்பை வரவேற்பதாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும் 7.9 சதவிகிதம் பேர் கருத்து இல்லை எனப் பதிவு செய்துள்ளனர். 

சர்வேயில் கேட்கப்பட்ட மற்ற கேள்விகளும் பதில்களும்...

உச்ச நீதிமன்றம் சர்வே ரிசல்ட்


டிரெண்டிங் @ விகடன்