வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (09/10/2018)

கடைசி தொடர்பு:14:32 (09/10/2018)

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நேப்டீல், ஜபாங்... எது உங்கள் சாய்ஸ்?! #VikatanSurvey

தீபாவளி வந்தாச்சு. இனி, `இந்த டைமாச்சு `மொறுமொறுனு' முறுக்கு சுட்டுத் தா மா!', `எனக்கு அதிரசம் வேண்டாம். லட்டு செஞ்சு கொடுங்க மீ', `சங்குச் சக்கரம் போரடிக்குது டாடி’. `ஒரே ஒரு ஆட்டம்பாம்ப் வைக்கவா ப்ளீஸ்!' என குட்டீஸ் முரண்டுபிடிக்கத் தொடங்கிவிடுவர். ஆனால், இதெல்லாம்விட மிகப் பெரிய வேலை `ஷாப்பிங்'. அலுவலகத்துக்கு லீவு போட்டு, வெயிலிலும் மழையிலும் கடைகடையாய் ஏறி இறங்கி துணிகளை வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது.

இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்தான் ட்ரெண்ட். `சிங்கிள் டச்சில்' வீட்டு வாசலில் வந்து இறங்கும் பொருள்களில்தான் `கிக்' இருக்கு என்று இந்தக் காலத்து தலைமுறையினர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இதனால் நன்மைகள் பல நமக்கு இருந்தாலும், சிறுதொழில் செய்பவர்களுக்குப் பாதிப்புதான். இதற்கேற்றதுபோல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் முன்னணி நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட், இன்னும் சில மணிநேரத்தில் தங்களின் மாபெரும் சலுகை திருவிழாவைத் தொடங்கவுள்ளனர்.

அமேஸான் ஃப்ளிப்கார்ட் சேல்

சாதாரணமாகவே இந்த அமேசானின் `கிரேட் இந்தியன் சேல்' மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் 'பிக் பில்லியன் டேஸ்' திருவிழா யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சலுகைகளை வழங்கும் பெரும்விழாவாக இருக்கும். அதிலும் இந்த ஆண்டு பல புதிய விளம்பரங்களை வெளியிட்டு, எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான உங்களின் விருப்பங்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

 

loading...

 


டிரெண்டிங் @ விகடன்