கேபிள்/ DTH குறித்த டிராயின் புதிய கட்டுப்பாடுகள் திருப்தியளிக்கிறதா? #VikatanSurvey | Do you support the new cable and DTH regulations designed by TRAI?

வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (09/02/2019)

கடைசி தொடர்பு:11:11 (09/02/2019)

கேபிள்/ DTH குறித்த டிராயின் புதிய கட்டுப்பாடுகள் திருப்தியளிக்கிறதா? #VikatanSurvey

வாடிக்கையாளராக நீங்கள் இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீர்கள்? இந்த சர்வேயில் பங்குபெற்று பதிலளியுங்கள்!

கேபிள்/ DTH குறித்த டிராயின் புதிய கட்டுப்பாடுகள் திருப்தியளிக்கிறதா? #VikatanSurvey

ந்த பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தள்ளன கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகளின் விலைக்கான டிராயின் புதிய விதிமுறைகள். இது கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும், மக்களுக்கு வேண்டிய சேவையைச் சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது டிராய். ஆனால் போதிய அவகாசம் தரவில்லை என ஒருபுறம் கேபிள் ஆபரேட்டர்களும், எங்கள் விலை நிர்ணயித்தலில் அதிகமாகத் தலையிடுகிறது டிராய் என மறுபுறம் தங்கள் கருத்தைத் தெரிவித்துவருகின்றனர். இப்போது `a la carte’ என்ற முறையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் சேனல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இருப்பதைப் போன்ற பொதுவான ஸ்டாண்டர்டு இல்லாமல் இருந்த இந்த டிவி சந்தையில் ஸ்டாண்டர்டு உருவாகியுள்ளதாக உணருகிறது டிராய். இதனால் தற்போது விலை ஏறுவதுபற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம். எப்படியும் விலை அதிகமாக இருந்தால் பார்வையாளர்கள் குறைந்துவிடுவர். சேனல்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானம் குறைந்துவிடும். எனவே சேனல்களின் விலை நாள் போக்கில் குறைந்து சரியான விலைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது டிராய். 

புதிய கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்:

மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்?

நிலை இப்படி இருக்க வாடிக்கையாளராக நீங்கள் இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்