`திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்?’ பா.ம.க-வின் ஐடியாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன? #Survey | is PMK stand for marriage under 21 is right? plz click this survey and vote ur comments

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:57 (18/03/2019)

`திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்?’ பா.ம.க-வின் ஐடியாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன? #Survey

பாமக

2019-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, இந்தத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பாரத ரத்னா விருது, கச்சத் தீவு மீட்பு, முத்தலாக் சட்டம் ரத்து உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள், 21 வயதுக்கு உட்பட்டோர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனில், இரு தரப்பு பெற்றோரின் அனுமதியும் பெற வேண்டும் எனும் அறிவிப்பு குறித்து விமர்சனம் எழுப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டம், ஒரு பெண்ணுக்கு திருமண வயதாக 18-யை வரையறுத்திருக்கையில், பா.ம.க 21 வயது வரை பெற்றோரின் அனுமதி வேண்டும் எனச் சொல்வது சரிதானா உட்பட பல கேள்விகளுக்கு உங்கள் கருத்துகளை அறியும் விதமான சர்வே இது. 

loading...


டிரெண்டிங் @ விகடன்