`பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா’ உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey | Will the government take action against the SP who revealed the victim's name?

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (26/03/2019)

கடைசி தொடர்பு:18:15 (26/03/2019)

`பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா’ உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களின் தாக்கம் தமிழக மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

எஸ்.பி

இந்த வழக்கைக் காவல் துறையைச் சரியான திசையில் கொண்டுசெல்லாது என்று பலரும் நினைப்பதற்கான காரணமாக, கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளிப்படையாகச் சொன்னதுதான். தவறுதலாகச் சொல்லிவிட்டேன் என்று அவர் சொன்னாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்கு மறைமுக மிரட்டல் என்றே பலரும் கருதினர். இதனால், எஸ்.பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஏ.பி.சூர்யா பிரகாஷ் என்பவர், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில் தமிழக அரசின் தரப்பில், `எஸ்.பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியிருந்தது. இந்த நடவடிக்கை உண்மையாக இருக்குமா... இல்லை வெறும் கண் துடைப்பாக இருக்குமா... உள்ளிட்ட கேள்விகளை உள்ளடக்கிய இந்த சர்வேயில் உங்களின் கருத்துகளையும் சொல்லுங்கள். 

loading...


டிரெண்டிங் @ விகடன்