Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெட்ராஸ் தெரியும்! சட்ராஸ் (Sadras) தெரியுமா? #VikatanPhotoStory

சென்னைக்குப் புறநகரில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றுதான் சதுரங்கப்பட்டினம் கோட்டை. சென்னை-பாண்டிச்சேரி மாமல்லபுரம் வழியாகச் செல்லும் ரூட்டில் கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை டச்சு மக்கள் ஆங்கிலத்தில் 'சட்ராஸ்' என அழைத்து வந்தனர். முந்நூறு வருடங்கள் பழைமையான இந்தக் கோட்டையைப் பதினேழாம் நூற்றாண்டில் டச்சு ஆட்சியாளர்கள் சமையல் எண்ணெய், முத்துகள் ஏற்றுமதிக்காகவும் மற்றும் மிக மிருதுவான ஆடைகளை நெசவு செய்யும் மையமாகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும், இது தானியக் களஞ்சியமாகவும், யானைப் படையின் இடமாகவும் இருந்திருக்க வாய்ப்புகளும் இருக்கின்றன.

டச்சு மற்றும் ஆங்கில ஆட்சியாளர்கள் தங்கள் வணிகத்திற்கு இந்தக் கோட்டையைப் பெருமளவில் பயன்படுத்தினார்கள். இப்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது. சட்ராஸ் கோட்டையில் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட சில கல்லறைகளும் இருக்கின்றன. காலப்போக்கில் போர்களாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கோட்டை சிதைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. மழைக்காலத்தில், சென்னையில ஒரு ஷார்ட் விசிட் பிளான்க்கு சட்ராஸ் நல்ல சாய்ஸ்தான்! சட்ராஸ் கோட்டை படத்தொகுப்பு இங்கே!

 

கருஞ்சாம்பல் வானத்தின்கீழ் சிதிலமடைந்த கோட்டையின் புறத்தோற்றம். கோட்டைச் சுவரோரம் மேயும் வெள்ளாடும் கறுப்பாடும். சிதிலமைந்த கோட்டையின் அருகே தென்னைமரங்கள். அதனருகே சில நவீனக் கட்டடங்கள்.

உதிர்ந்த சுவர்ப்பூச்சுகளால் தெரியும் கருஞ்சிவப்பு செங்கற்கள், அதனிடையே  முளைத்திருக்கும் புட்களும் செடிகளும்.     

கடித்த கேக்குகளைப்போல் உள்ளன இந்தச் செங்கற்கள். மேலும் இவை உடைந்த பற்களைப் போன்றும் காட்சியளிக்கிக்னறன.

புட்களும் செடிகளும் நிரம்பிய வட்டமான கேணி. 

உடைந்து பிளந்துகிடக்கும் சுவர்கள். பெயர்க்காத சுண்ணாம்புச் சுவருடன் இருக்கும் கோட்டையின் ஒரு பகுதி ஓர் ஒற்றை வீடு போல் உள்ளது.

சுவரின் ஓட்டையில் திணிக்கப்பட்டுள்ள உடைந்த சுவரின் துண்டு.

இருண்ட ஜன்னல்களும் வாசலும்.

கறுத்தாலும் வெளுத்தாலும் திடத்தன்மையோடு இருக்கும் இரண்டு வாசலும் மூன்று ஜன்னல்களும்

'V' வடிவ வெளியில் தெரியும் கடலில், ஒரு பெருஞ்சுமையோடு பயணிக்கும் ஆள் தெரியா படகு.  

 

மேற்புறமும் அடிப்புறமும் இடிந்து ஒரு வரைபடமாய்த் தெரியும் வாசல்.

ஓங்கி உயர்ந்த சுவரின் அருகே தரைமட்டமான இன்னொரு சுவர்.

.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement