வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (19/10/2017)

கடைசி தொடர்பு:19:30 (19/10/2017)

கருங்கல்லில் மோதும் வெண்ணிற அலைகள்- புதுவைத் துறைமுகப்பாலம் #VikatanPhotostory

VikatanPhotostory

 

 

VikatanPhotostory

நீலநிற வானில் மிதக்கும் வெண்ணிற மேகங்கள். அதன் கீழே சர்க்கரைக் குவியலென இருக்கும் கடற்கரை மணல் அருகே, கருங்கல்லில் மோதும் வெண்ணிற அலைகள்.  கடல்நீரில் காலூன்றி நிற்கும் துறைமுகப் பாலம் தூரத்திலிந்து பார்ப்பதற்கு ஜன்னல்வைத்ததுபோல் உள்ளது. அத்துறைமுகப் பாலத்தின் பிரம்மாண்டத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சலிக்காமல் ரசித்துக்கொண்டிருக்கலாம்.VikatanPhotostory

வெள்ளை சிவப்பு வண்ணமடித்த இரும்புச் சங்கிலிகள் கைகோத்த நிலையில் உள்ளன. கவர்னர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தளத்திற்குப் பாதுகாப்புப் பணியில் உள்ளார் காவலாளி. அவரின் குட்டையான நிழல் அவரின் காலணி அளவே உள்ளது.

VikatanPhotostory

அடர்நீல வானத்தை இருள் மெள்ளக் கவ்வுகிறது. அவ்விரவிற்கு கண்களைப் போல் உள்ளன மின்விளக்குகள். பிரெஞ்சு கலாச்சார பாணியில் உள்ள இவ்விளக்குகளின் ஒளிமீதுதான் விஐபிகள் நடைபயணம் மேற்கொள்வார்கள். 

VikatanPhotostory

வெறிச்சோடிக் கிடக்கும் பாலத்தின்மீது பல காக்கைகள். ஒன்று சிறக்கடிக்கிறது. மற்றொன்று விளக்கின்மீது அமர்ந்திருக்கிறது.  இவைமட்டுமன்றி  மீதமுள்ள காக்கைகளில் ஒன்று கடலைக் கொத்துவதுபோல் பார்க்கிறது. ஒரு காவலாளி கப்பலை நோக்கி நடக்கிறார். 

vikatanphotos story

தங்கநிற ஒளியில் மினுங்கும் கடற்கரை. அத்தங்க நிறத்தின்மீது உள்ள காலடிச் சுவடுகள். வட்டமான ஒளி மிதக்கும் கடல்.  தற்பொழுது இந்த பாலம் முடியும் வரை மணற்பரப்பை விரிவு செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

 

Vikatan photo story

பாலத்தில் உள்ள ஓங்கி உயர்ந்த மின்கம்பங்களின் நடுவே தெரியும் இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல் நின்று கொண்டிருக்கிறது.  

 

Vikatan photo story

 தானே புயலின்போது சாம்பல் நிற கடல் அலைகள் ஆர்ப்பறிக்க புகைபோல் பொங்கிக் கசிகின்றன சிறுசிறு அலைச்சிதறல்கள்.   திகைத்தபடி வேடிக்கை பார்க்கிறார் சிவப்புநிற உடையணிந்த காவலாளி  பாலம்.

 

Vikatan photo story

 நேராகவும் சாய்ந்தபடியும் நிற்கும் தென்னை மரங்களின் சூழ இருக்கும் கட்டடங்கள். அவற்றில் ஒன்று கிடுகளால் வேயப்பட்ட மேற்கூரை ஒன்று உள்ளது.  பாலத்தின் இறுதியில் நின்று கொண்டு பார்த்தால் கடற்கரையின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.

 

Vikatan photo story

ஒளிவெள்ளத்தில் மிதக்கும் கடற்கரைச் சாலையும், கடலில் மிதக்கும் ஒளிவெள்ளமும். 

 

Vikatan photo story

பாலத்திலிருந்து கடற்கரைப் பகுதியைக் கண்காணிக்கும் போலீஸார்.

 

Vikatanphotostory

நீலநிறத்தில் ஒரு வீடு. பச்சைநிறத்தில் ஒரு வீடு. ஊதா நிரத்தில் ஒரு வீடு. வெள்ளை நிறத்தில் பல வீடுகள் என பாலத்தின் அருகில் உள்ள வீடுகள் காட்சியளிக்க, பாலமோ கடல்மீது நிற்கும் ரயிலாகக் காட்சியளிக்கிறது.  கழுகுப் பார்வையில் துறைமுகப் பாலம் இப்படித்தான் தெரியும்.

 

Vikatanphotostory

பெரிய கப்பல்களைத் துறைமுகத்தில் நிறுத்த பயன்படுத்தப்பட்ட தூண்.

 

Vikatanphotostory

பல்வேறு நிறங்களில் உள்ள சிறிய அளவிலான ஃபைபர் படகுகள் பாலத்தின் அருகே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

 

Vikatanphotostory

பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் தூண்கள்.

 

Vikatanphotostory

சதையற்ற எலும்புக் கூடுகளைப் போல் உள்ள பாலத்தின்மீது அமர்ந்து மீனின் சதை தேடும் மனிதர்.

 

Vikatanphotostory

நகரத்தின் அழகை ஃபிரேம்களுக்குள் அடக்கும் துறைமுகப் பாலம்.

 

Vikatanphotostory

கைபிடிச் சுவர் எதுவும்  இல்லாமல் இருக்கும் படிக்கட்டுகள்.

 

Vikatanphotostory

அலைகள் தின்ற பாலத்தின் சதைகள். ஒற்றை எலும்பாகவும் ஒடிந்த எலும்பாகவும் காட்சியளிக்கின்றன அதன் தூண்கள்.

 

Vikatanphotostory

பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் தூண்கள் பலவீனமாக உள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயமும் இருக்கிறது.

 

Vikatanphotostory

மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்