வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (03/11/2017)

கடைசி தொடர்பு:15:07 (03/11/2017)

சீன அரசு பாண்டா கரடிகளைப் பரிசாக தந்தால் என்ன அர்த்தம்? #VikatanPhotoStory

பாண்டா

சீனாவில் ஒரு பழக்கம் உண்டு. கி.பி. 6-ம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை தொடரும் பழக்கம். அதற்கு “Panda diplomacy” என்று பெயர்.

 

பாண்டா

இரண்டு அரசுகள் அல்லது நாடுகள் நட்புறவை வளர்க்க பரிசுகள் கொடுத்துக் கொள்வது உண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தப் பரிசுபொருள் மாறும். சீனாவின் முக்கியமான பரிசு பாண்டா கரடிகள்.

பாண்டா

அவ்வளவு சீக்கிரம் சீன அரசு பாண்டாக்களை தந்துவிடாது. அதை அவர்கள் தருகிறார்கள் என்றால், அந்த நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அர்த்தம்.

 

பாண்டா

பாண்டா கரடிகள் சீனாவின் பொக்கிஷம். சீனாவில் பாண்டாக்களை யாராவது கொன்றால், அவர்களுக்கு மரண தண்டனையே கிடைக்கும். அவ்வளவு ஸ்பெஷல், பாண்டா.

பாண்டா

சென்ற மாதம் சீன அரசு இந்தோனேஷியாவுக்கு 2 பாண்டாக்களை பரிசாக அளித்தது. இரண்டு நாடுகளுக்கு இருக்கும் 60 ஆண்டுகால நட்பின் அடையாளமாக இதை சீனா பரிசளித்தது.

 

பாண்டா

Cai Tao மற்றும் Hu Chun என்ற பெயர் கொண்ட இந்தப் பாண்டாக்களின் வயது 7.

பாண்டா

இதுவரை 15 நாடுகளுக்கு சீனா பாண்டாக்களை பரிசளித்திருக்கிறது. இந்தோனேஷியா 16வது நாடு.

 

பாண்டா

பாண்டாக்கள் உலகில் குறைந்த எண்ணிக்கையிலே இருக்கின்றன. 1800 பாண்டாக்கள் மட்டுமே உலகில் மீதமிருக்கின்றன.

picture courtesy: apexchange

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்