`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்! - #VikatanPhotoStory

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்றுகூறும் அளவுக்குப் பெரும் சிறப்பு வாய்ந்த  திருவாசகத்தை அருளிய  மாணிக்கவாசகரை, சிவபெருமானே குருந்த மரத்தினடியில் குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம். ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல...  தமிழர்களின் அரிய சிற்பக்கலைத் திறனுக்கும் சாட்சியாக விளங்கும் திருக்கோயில்... ஆன்ம ஞானம் தேடி வரும் அன்பர்களுக்கு அள்ளி அருளும் அற்புதக் கோயில்..!  ஆவுடையார் கோயில் அரிய சிற்பங்கள் இங்கே உங்களுக்காக...

ஆவுடையார் கோயில்

பேரருள் திறம் கொண்ட பெருந்துறைப் பெருமான்... ஆவுடையார்கோயில் கோபுர தரிசனம்...

 

துவாரபாலகர்

நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன் .. சொல்லாமல் சொல்லும் ஆவுடையார் கோயில் துவாரபாலகர்

 

குரு

குருந்தமரத்தடியில் குருவாக அமர்ந்து ஆட்கொண்ட அருளாளர் காட்சி தரும் கோலத்தை தரிசிக்கும் பக்தர்கள்...

 

ஆநிரைகள்

ஆவுடையார்கோயில் பிராகாரத்தில் பசியாறும் ஆநிரைகள்...

 

பாண்டியன்

மாணிக்கவாசகரைச் சிறைப்படுத்திய அரிமர்த்தன பாண்டியன்.. இவன் கொடுத்த பொன்னும் பொருளும் கொண்டு எழுப்பப்பட்ட ஆலயம்தானே ஆவுடையார்கோயில்?!

 

பாம்பு

கலைநயம் மிக்கத் தூணில் சிவலிங்கத்துக்கு மேலாக இருப்பது கற்கோலம் அல்ல; பின்னிப் பிணைந்த இரண்டு பாம்புகளின் கலைக் கோலம்...

 

கொடுங்கைகள்

பிற்காலச் சிற்பிகள் செய்யத் தயங்கும் ஆவுடையார்கோயில் கொடுங்கைகள்... அன்றைய சிற்பிகளின் அற்புதக் கலைவண்ணம்...


 

நடன நங்கை

ஆடலரசனை ஆடலால் வழிபடும் நடன நங்கை தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அழகுக் கோலம்!

 

பிராகாரம்

இருளும் ஒளியும் போல இன்பம் துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை... கோயில் பிராகாரம் உணர்த்தும் உண்மை இதுதானோ..?

 

ஞானவெளிச்சம்

மாயை இருளைக் கடந்தால்... ஞானவெளிச்சம் தோன்றுமோ?

 

திருவாசகம்

குருந்த மரமும்... குருமூர்த்தியும்... திகட்டாத திருவாசகம் அருளிய மணிவாசகரும்...

 

பிள்ளையார்

எண்ணெயும் நீரும் காணாமல் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறாரோ பிள்ளையார்?

 

அழகன்

அழகு மயிலேறி அருள்புரிய வரும் அழகன் முருகனின் எழிற்கோலம்...

 

ஈட்டி வீரன்

சிவநிந்தை செய்வோரை விடமாட்டேன்...சினம் கொண்டு ஈட்டி எறியும் வீரன்...

 

ஞானம்

மண்டபத்தினுள்ளே ஞானம் தேடி ஏகாந்தமாக இருக்கிறார்களோ..?

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!