சென்னை மழையும்... இல்லத்தரசிகள் அனுபவித்த வேதனையும்! #VikatanPhotoStory

மழை

கெட்ட நீர் தீண்டிடக் கூடாதுனு 

பெத்த மனசு பதறுது...

எட்டா உயரத்தில் இருக்கிறவங்களுக்கு

எங்கே இது புரியுது!

மழை

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை

அன்பு வெள்ளத்தால் கவனிப்போம்

தண்ணியே விருந்தாளியா வந்தால்

எங்கே நாங்க நிற்போம்!

மழை

உங்க வாழ்வுக்கு ஒளி காட்டுவோம்னு 

வாங்கிட்டு போனாங்க ஓட்டு

இப்போ மகனும் மகளுமே

வழிகாட்ட நடக்கறோம் பாதை பார்த்து!

 

மழை

பார்வையிலே பயம் இருந்தாலும்

தங்கச்சிக்கு நானே துணை

பள்ளம் மேடு வந்தாலும்

கடந்திடணும் இது எங்க வினை!

மழை

பேத்திக்காக பத்திரம் பண்ணி

சேமிச்சுவெச்ச சொத்து

பத்து பாத்திரம் தேய்ச்சு

வாங்கிவெச்ச சொத்து!

மழை

கழுத்து வரை வெள்ளம்

எங்களுக்குப் புதுசில்லே

கஷ்டங்களை உதைச்சுத் தள்ள

உடம்புல தெம்பு இருக்கில்லே!

மழை

சாலையிலே தண்ணி போனா

சேர்ந்து நாம கப்பல் விடலாம்

வீட்டுக்குள்ளே வெள்ளம் போனா

 தம்பி உனக்கு நான்தானே ஓடம்!

மழை

நாலு பாத்திரங்கள் கழுவ 

சுற்றி நிறைய தண்ணி இருக்கு

வேலை முடிஞ்சு உட்கார

எங்கே போவேன் ராசா!

மழை

 அரசுகிட்டே நியாயம் எதுவும் 

 கேட்காமல் ஒதுங்கி நில்லு

 முடியலைன்னா சாக்கடை நீரில்

 இறங்கி போய்ட்டே இரு!

மழை

மனிதனோ, மிருகமோ

எங்க அன்பு மாறாது...

வெள்ளமோ, சுனாமியோ

எங்க உறுதி குலையாது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!