சிரிக்கும்... கோவப்படும்... மனிதர்களைக் காக்கும்... ஏமி ஜாக்ஸனைவிட அழகான நிஜ ’ரோபோ’! #VikatanPhotoStory

ரோபோ

சோஃபியா... ஒரு ரோபோ. சென்ற மாதம் சவுதி அரசு இந்த ரோபோவுக்கு குடியுரிமை தர, ஓவர் நைட்டில் உலகப் புகழ்பெற்றுவிட்டாள் சோஃபியா. மற்ற ரோபோக்களிடமிருந்து சோஃபியாவை வித்தியாசப்படுத்தும் 5 விஷயங்களைப் பார்க்கலாம்.

 

ரோபோ

செம ஜாலி:
தன்னிடம் பேசுபவர்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை வைத்தே அவர்கள் மனநிலையை அறியும் சோஃபியா. ”ரோபோக்களால் மனிதர்களுக்கு ஆபத்து வருமா?” என ஒருவர் கேட்க, “நீங்கள் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்க்கிறீர்கள்” என கிண்டலடித்தது சோஃபியா.

சோஃபியா ரோபோ

செண்டிமெண்ட் லேடி:
”நான் மனிதர்களுடன் சேர்ந்து பணிபுரிய விரும்புகிறேன். அதனால் அவர்களைப் போலவே என்னுடைய உணர்ச்சிகளை நானும் வெளிப்படுத்துவேன். கோபம் வந்தால் கோபப்படுவேன். சிரிப்பு வந்தால் சிரிப்பேன்” என்கிறது சோஃபியா

சோஃபியா ரோபோ

அழகி:
சோஃபியாவைத் தயாரித்த ஹன்சன் ரொபோட்டிக்ஸ் நிறுவனம், புகழ்பெற்ற நடிகை Audrey Hepburn தான் சோஃபியாவின் ப்ளூ பிரிண்ட் என்கிறார்கள். அந்த ஷார்ப்பான மூக்கும், சருமமும், கண்களும் அவரிடமிருந்தே சோஃபியாவுக்கு டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது.

சோஃபியா ரோபோ

மனிதர்களை காக்க வருகிறாள் சோஃபியா:
”இரக்கக்குணத்துடனும், நல்லறிவுடனும் தான் நான் படைக்கப்பெற்றிருக்கிறேன். என்னால் மனிதர்களைக் காப்பாற்ற முடியும். அதுதான் என் முதல் வேலை” என்கிறாள் சோஃபியா.

சோஃபியா ரோபோ

சோஃபியாவின் கர்த்தா:
சோஃபியாவை உருவாக்கிய டேவிட் ஹன்சன், இதற்கு முன் டிஸ்னியில் வேலை செய்தவர். ”நம்மால் தீர்க்க முடியாத பிரச்னைகள் உலகில் ஏராளம் உள்ளன. அவற்றை ரோபோக்கள் தீர்க்கும். சோஃபியாவும்” என்கிறார் டேவிட்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!