பரிதவிப்பு, க்யூ... டீமானிடைசேஷன் நினைவுகள்! #VikatanPhotoStory | Remembrance of Demonetisation in its first anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (09/11/2017)

கடைசி தொடர்பு:14:34 (09/11/2017)

பரிதவிப்பு, க்யூ... டீமானிடைசேஷன் நினைவுகள்! #VikatanPhotoStory

டந்த ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு பிரதமரிடமிருந்து வந்த பணமதிப்பு நீக்கம் பற்றிய அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் திக்குமுக்காட வைத்துவிட்டது. அந்த அறிவிப்பின்போது, “தேச விரோத சக்திகளிடம் இருக்கிற ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் இனி வெற்றுக் காகிதங்களாக மாறிவிடும்’’ என்றார் பிரதமர். அந்த நம்பிக்கையில் நம் நாட்டுக்காக ஓரிரு வாரங்கள் சிரமப்பட்டாலும் பரவாயில்லை அடுத்தநாள் காலையிலிருந்து பொதுமக்கள் நூறு ரூபாய்க்காக வங்கிகளின் வாசலில் கால்கடுக்கக் காத்திருந்தார்கள். அந்த நாட்களின்  நினைவலைகள் இங்கே... 

பணமதிப்பு நீக்கம்

பாடுபட்டு உழைச்ச காசை சிக்கனமா சேத்து வெச்சதுக்கு தலையில முக்காடு போட வெச்சிட்டாங்களே...!பணம் எடுக்கக் காத்திருக்கும் மக்கள்

உள்ள போனதும் நோட்டு காலியாகிடுச்சுன்னு சொல்லிடுவாங்களோ...!

 

வெயிலில் சிரமப்படும் மக்கள்

இனிமேல் நம்ம எல்லாருக்கும் ஏறுமுகம்தான் போல...நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

எல்லையில அங்க ராணுவ வீரர்களும் இப்படித்தான் காலகடுக்க நிக்குறாங்களாமே...


இரவு நேரத்திலும் பணம் எடுக்க வரிசையில் நிற்கும் மக்கள்

ஒட்டுமொத்த ஊரையே தூங்க விடாம பண்ணிட்டீங்களே... தெய்வம் சார் நீங்க... 
 

 

மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நிற்கிறார்கள்

மழையோ புயலோ எதுவானாலும் சரி நூறு ரூபா நோட்ட கண்ணுல பாத்தாதான் இங்க இருந்து நகருவோம்...

 

நீண்ட வரிசையில் பொதுமக்கள்

வருணபகவானே உனக்குமா எங்க மேல கருணை இல்லாம போயிடுச்சு...

 

ஏ.டி.எம் வாசலில் மக்கள்

இவங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்கே மை லார்ட்...வெகு நேரமாக உட்கார்ந்திருக்கும் மக்கள்

நின்னு நின்னு காலுதான் வலிக்குது. பத்து மணிக்குள்ளயாவது பேங்க்க தெறந்துடுவாங்களாம்மா...

 

வெயிலையும் பொருட்தாதவர்கள்

இந்தியாவ வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போறதுக்கு இன்னும் எத்தனப் படிக்கட்டுதான் ஏறணுமோ...

 


டிரெண்டிங் @ விகடன்