ஐஸ்க்ரீம் ஸ்பூன், டயப்பர், பலூன்... விநோதமான மணப்பெண் உடைகள்! #VikatanPhotoStory | Unique bridal costume

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (17/11/2017)

கடைசி தொடர்பு:19:50 (17/11/2017)

ஐஸ்க்ரீம் ஸ்பூன், டயப்பர், பலூன்... விநோதமான மணப்பெண் உடைகள்! #VikatanPhotoStory

டலுக்கு அடியில கல்யாணம், பாரசூட்ல பறந்துக்கிட்டே கல்யாணம்னு விதவிதமான கல்யாணங்களைப் பார்த்திருப்பீங்க... வில்லங்கமான மணப்பெண் ஆடைகளைப் பார்த்திருக்கீங்களா... ! 

1. பிறந்த நாள் விழாக்கள்ல கலர் கலரா பலூன் கட்டிப் பார்த்திருப்போம். இந்தப் பொண்ணு பலூன்களான வெட்டிங் கவுன் போட்டிருக்கிற அழகைப் பாருங்க. ஏதாவது, சேட்டைக்காரப் பொடிசு ஊசியால குத்தாம இருந்தா சரி. 

உடைகள்

   

 2. இது கள்ளிச்செடியில் பூப்  பூத்த மணப்பெண் ஆடை. முள்ளு வைக்க மறந்துட்டாங்க போல...

உடைகள்

 

   3. கணவன் - மனைவி ரெண்டு பேருக்குமே உடம்போட முக்கியமான இடங்களை மட்டும் மெல்லியத்  துணியால மறைச்சிட்டு , மத்த இடங்கள்ல பாடி பெயின்ட்  பண்ணியிருக்காங்க.  

உடைகள்

 

  4. இது மம்மி டைப் மணப்பெண் ஆடை. 

உடைகள்

 

  5. பாவம் குட்டீஸ்கள், அவர்களுடைய டயப்பர்ஸ் எல்லாம் கல்யாண கவுன் ஆகிவிட்டதே!

உடைகள்

   

6. இது கொசுவலையில் தைக்கப்பட்ட கல்யாண கவுன். வெயில் காலத்துல கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு செம டிரஸ்.  

உடைகள்

   

7. வேட்டைப் பிரியர்களுக்கு ஏத்த மணப்பெண் ஆடை. 

உடைகள்

   

8. செம்மறியாட்டு முடியில நெய்யப்பட்ட கல்யாண கவுன். இங்கயிருக்கிற கல்யாண  கவுன்கள்லேயே இதுதான் விலைக்குறைச்சல். 

உடைகள்

   

 9. இது தேவதை கவுன். பபுள்கமை மென்று ஊதினால் எப்படி இருக்கும்கிற ஐடியாவுல உருவானது. 

உடைகள்

   

 10. பார்க்கிறத்துக்கு வெளிநாட்டுக்காரங்களோட பாரம்பர்ய மணப்பெண் ஆடை மாதிரி தெரியுதில்ல... ஆனா, இந்த கவுன் எதனால தைக்கப்பட்டது தெரியுமா, கையுறைகளால..!

 உடைகள்

 

 

11. இது பாட்டில் மூடிகளால் உருவாக்கப்பட்ட மணப்பெண் ஆடை. வாங்கத்தான் இன்னும் ஆள் வரலை. 

உடைகள்

                   


டிரெண்டிங் @ விகடன்