வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (18/11/2017)

கடைசி தொடர்பு:07:59 (18/11/2017)

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும் நாள்கள், பூஜைகள், விசேஷங்கள்! #VikatanPhotoStory #Sabarimala

பரிமலையில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக யோக நிலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர் ஐயன் ஐயப்பன். உலகெங்கிலும் இருந்து ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மாதம்தோறும் ஐயப்பனின் சந்நிதி திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றாலும் அங்கே நடைபெறும் மண்டல பூஜையும், மகர ஜோதி வைபவமும் மிகவும் விசேஷமானவை. லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். வரும் 2018-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் சந்நிதானம் திறந்திருக்கும் நாள்கள் பற்றிய விவரங்கள் இங்கே... 

ஐயப்பன்

 

2017-ம் ஆண்டின் மண்டல  பூஜை, நவம்பர் 16-ம் தேதி  தொடங்கி. 41 நாட்கள்  ஸ்ரீ ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். 

மண்டல  பூஜை

 

டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜையின் இறுதி நாளில் தங்க அங்கி அணிந்த ஐயப்ப ஸ்வாமி பக்தர்களுக்கு காட்சி தருவார். 

படி பூஜை

 

மகர ஜோதி விழாவுக்கென டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். 2018 ஜனவரி மாதம் 14-ம் நாள் மகர ஜோதி விழா நடைபெறும். ஜனவரி 20-ம் நாள் கோயில் நடை சாத்தப்படும். 

மகர ஜோதி


2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 முதல் 17 வரை ஐயப்பனின் கோயில் நடை திறந்து மாசி மாத பூஜைகள் நடைபெறும்.

ஸ்ரீ ஐயப்பன்

 

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 14 முதல் 19 வரை ஐயப்பனின் கோயில் நடை திறக்கப்படும். 

சபரிமலை

 

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20 முதல் 30 வரை பங்குனி உத்திர உற்சவ விழாக்கள்  நடைபெறும். மார்ச் 21-ம் தேதி கொடியேற்றமும், 30-ம் தேதி ஆராட்டு விழாவும் நடைபெறுகிறது.

பதினெட்டு படிகள்

 

மீண்டும் விஷு மஹோத்சவம் எனும் புத்தாண்டுத் திருவிழா 2018-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் நாள் தொடங்கி 18-ம் நாள் வரை நடைபெறும். ஏப்ரல் 15-ம் நாள் சித்திரை விஷு திருநாள்.

பதினெட்டு படிகள்

 

2018-ம் ஆண்டு மே மாதம் 14-ம் நாள் தொடங்கி 19-ம் நாள் வரை வைகாசி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை

 

2018-ம் ஆண்டு ஜூன் 24 மற்றும் 25 நாள்களில்  ஸ்வாமி ஐயப்பனை பிரதிஷ்டை செய்த நாள்  சிறப்பு பூஜைகளோடு கொண்டாடப்படும்.

சபரிமலை

 

ஆனி மாத சிறப்பு பூஜைக்காக 2018-ம் ஆண்டு  ஜூன் 14 முதல் 19 வரை நடை திறக்கப்படும்.

சபரிமலை

 

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக   ஜூலை 16 முதல் 21 வரை நடை திறக்கப்படும்.

பம்பா நதி

 

ஆவணி மாத சிறப்பு பூஜைக்காக 2018-ம் ஆண்டு  ஆகஸ்ட் 16 முதல் 21  வரை நடை திறக்கப்படும். ஓணம் சிறப்பு வழிபாட்டுக்காக  செப்டம்பர் 23 - 27 வரை நடை திறக்கப்படும். 24 அன்று ஓணம் கொண்டாடப்படுகிறது. 

பம்பா

 

புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக 2018-ம் ஆண்டு  செப்டெம்பர் 16 முதல் 21 வரை நடை திறக்கப்படும். ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக 2018-ம் ஆண்டு  அக்டோபர் 16 முதல் 21 வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 

சபரிமலை

அக்டோபர் மாதத்தில் 5 மற்றும் 6-ம் நாள்களில் ஸ்ரீ சித்திரை திருநாள் ஆட்ட விசேஷம் என்ற விழாவும் நடைபெறும். 

 


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை