திருவண்ணாமலையா... தேவலோக வீதியா...- தீபத்திருவிழாவில் அணிவகுக்கும் பஞ்சமூர்த்திகள்! #VikatanPhotoStory | Thiruvannamalai Maha Deepam

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (27/11/2017)

கடைசி தொடர்பு:14:40 (01/12/2017)

திருவண்ணாமலையா... தேவலோக வீதியா...- தீபத்திருவிழாவில் அணிவகுக்கும் பஞ்சமூர்த்திகள்! #VikatanPhotoStory

6-ம் நூற்றாண்டில் தோன்றிய திருஞான சம்பந்தர், 'மயிலாப்பூர் பூம்பாவாய் பதிகம்' தமிழர்களின் பத்துப் பண்டிகைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் முதல் பண்டிகை, கார்த்திகை தீபம்தான். ஆதிகாலம் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகைத் தீபத்திருநாள் டிசம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த ஆதிசிவனை நெருப்பு வடிவில் குடியிருக்கும் திருவண்ணாமலை திருத்தலத்தில் அன்று மகாதீபம் ஏற்றப்படும். தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் 10 நாள் தீபத்திருவிழாவின் கண்கொள்ளாக்காட்சிகள் இங்கே!  

தீபத்திருவிழா

"ஆடியது ஆலங்காட்டில், அமர்ந்தது ஆலங்குடியில் என்றால், எங்கள் ஐயனே நீ அனலாக எழுந்து அருளியது அண்ணாமலையில் அன்றோ!" 

திருவண்ணாமலை

 

"கல்விக்கும் (பிரம்மா) செல்வத்துக்கும் (விஷ்ணு) எட்டாத பேரொளியே! எங்கள் சிவனே, சரணாகதிக்கு மட்டுமே சிக்கும் எங்கள் ஞானச்செல்வமே!"

சிவசக்தி

பஞ்சமூர்த்திகளில் முதல்வனான மூஷிக வாகனன், முழுமுதற்கடவுள் கணபதி தங்கக்கவச கோலத்தில் தலைமை தாங்கி வருகிறார்.

விநாயகர்

தவமே (சக்தி) தவமிருந்து இடபாகம் பெற்ற தலமன்றோ திருவண்ணாமலை! ஈசனும் சக்தியும் இணைபிரியாத அழகு கோலத்தில் உலா வருகிறார்கள்.

அம்மையப்பன்

சேஷ வாகனத்தில் அம்மையும் அப்பனும் ஆனந்த வலம் வரத்தயாராகிறார்கள். காணும் பக்தர்களுக்கு அது அற்புத தரிசனம்.

சேஷ வாகனம்

திரண்ட கூட்டத்தில் எழுந்தது "அரோகரா' கோஷம்! அங்கு அதைத்தவிர வேறெதுவும் கேட்காது. "அண்ணாமலைக்கு அரோகரா.. உண்ணாமலை அம்மைக்கும் அரோகரா..."

திருவண்ணாமலை

கோயிலை சிதைக்க வந்த பகைவனுக்கு எழுந்து நின்று கால் மடக்கி அமர்ந்து அற்புதக் கோலம் காட்டிய நந்தியெம்பெருமான். 

நந்தி

மலையே லிங்கமாக, வானமே விதானமாக காட்சி தரும் பிரமாண்ட வடிவத்தின் முன்பு திருக்கோயிலின் முழுத்தோற்றம்.

அண்ணாமலையார் கோயில்

பஞ்சபூதத் தலங்களில் முதன்மைத்தலமான அக்கினித் தலத்தில் பஞ்சமூர்த்திகளின் அற்புத அணிவகுப்பு. பரவசத்தில் பக்தர்கள் கூட்டம்.

பஞ்சமூர்த்திகள்

புருஷாமிருக வாகனத்தில் சிவனும் சக்தியும்! நினைக்கவே முக்தி தரும் திருத்தலத்தில் அம்மையப்பனை தரிசிக்கவும் செய்தால் அது எத்துணை பெரிய புண்ணியம்..!

புருஷமிருக வாகனம்

கோயிலை விட்டு பக்தர்களை நாடி வரும் சிவசக்தி தம்பதியர், அருட்கடலில் நீந்தும் பக்தர்கள்!

ஊர்வலம்

"வேத கோஷத்துக்கும், சாம கானத்துக்கும் மயங்கும் ஈசன், இந்தச் சிறு சிவனடியாரின் இசைக்கு மயங்க மாட்டானா என்ன?"

சிவனடியார்

பதினான்கு லோகங்களையும் தாண்டி நின்ற அந்த ஜோதிப் பிழம்பின் வடிவத்தை எடுத்துக்காட்டவென்றே விண்ணளந்து நிற்கும் திருவண்ணாமலை கோபுரங்கள்.

கோபுரங்கள்

உலகமெலாம் ஈசனின் ஆளுகையில்தான் என்பதை எடுத்துக்கூறும் ரிஷபக்கொடி தாங்கிய கொடிமரம்! .

கொடிமரம்

வள்ளி, தெய்வயானை சமேத முருகப்பெருமான். அருணகிரிநாதரைக் காத்து அருள் செய்த பெருமான் எல்லாப் பக்தர்களையும் காக்கட்டும்.

முருகப்பெருமான்

நாமழைக்க உடனே வரும் வேலவன், மயில் வாகனத்தில் தயாராக அமர்ந்துள்ளான். வேலவன் இருக்க வேதனைகள் எதற்கு?

மயில் வாகனம்

'வேண்டியதை மட்டுமல்ல, நீங்கள் வேண்ட மறந்த செல்வங்களையும் அள்ளித்தருவேன், அதற்குத்தான் இந்தக் கற்பக விருட்சம்' எனச் சொல்லாமல் சொல்கிறாரோ அண்ணாமலையார்!

கற்பக விருட்சம்

"கம்பீர வடிவில் கணநாதர், விக்கினங்கள் யாவையும் விலக்கும் வேதவடிவான யானைமுகனே, எங்களின் வினைகள் யாவையும் தீர்த்துவிடும் ஐயனே...!"

கணபதி

வீணை தாங்கிய வாணியின் வடிவில் உண்ணாமலையம்மன், காமதேனு வாகனத்தில். எங்கள் வேண்டுதல் யாவும் நின்னருள் அன்றி வேறு ஏது தாயே?

வீணை வாணி

தேரடி வீதியில் உலா வரும் தெய்வங்கள். இது திருவண்ணாமலையா, தெய்வலோக வீதியா என்று திகைக்கும் பக்தர்கள் கூட்டம்.

தேரடி வீதி

 

 


டிரெண்டிங் @ விகடன்