வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (12/12/2017)

கடைசி தொடர்பு:13:07 (12/12/2017)

2016 பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் டெல்லி, சென்னை முதலிடம்... எதில் தெரியுமா? #VikatanPhotoStory #NCRBlist2016

ஒவ்வொரு வருடமும், அதற்கு முந்தைய வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்படும். அதன்படி 2016-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட குற்றங்களுடைய புள்ளி விவரங்களை தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவற்றில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் சதவிகிதம் அதிர்ச்சியளிக்கும் விதமாக உயர்ந்துள்ளன!

பெண்களுக்கு எதிரான வன்முறைகடந்த வருடம் பதிவுசெய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 3% குறைந்திருந்தது. ஆனால், இந்த வருடம் மீண்டும் 2.9% அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலானவை கணவர் மற்றும் கணவரின் உறவினர்களால் (32.6%) நடத்தப்பட்ட வன்முறைகளாக  இருக்கின்றன. சம்பந்தப்பட்ட பெண்ணின் சமூக அந்தஸ்தை சீரழிப்பது (25%), கடத்திச் செல்வது (19.5%), பாலியல் வன்புணர்வு(11.5) ஆகிய குற்றங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகுழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் 13.6% அதிகரித்திருக்கின்றன. அதற்கு முந்தைய வருடத்தோடு ஒப்பிட்டால், கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றன என்று தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தரக்கூடிய தரவு அவமானம்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகுழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் கடத்தல் பிரிவில் 52.3% வழக்குகளும், 'போக்ஸோ' எனக்கூடிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் பிரிவில் 34.4% வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள்18 வயதுக்குக் குறைவானவர்கள், சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவது 7.2%  அதிகரித்திருக்கிறது. வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள் 4.3% அதிகரித்திருக்கின்றன. 2015ல் இது 9.7% அதிகரித்திருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான குற்றங்களுடன் முன்னணியில் இருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்இந்தியாவில் இருக்கும் 19 நகரங்களில் டெல்லி பாலியல் குற்றங்கள், ஆள் கடத்தல், ஆசிட் வீச்சு என்று எல்லாவகை குற்றங்களிலும் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் மும்பை இருக்கிறது. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களுக்குக் கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களில், சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான குற்றங்கள் இருசக்கர வாகனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை.

சைபர் குற்றங்கள்சைபர் குற்றங்கள் 6.3% அதிகரித்திருக்கின்றன. பெரும்பாலான வழக்குகள் மும்பையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வகை வழக்குகளில் பெரும்பாலானவை, தனிப்பட்ட காரணங்களுக்கானவை. பழிவாங்கல் மற்றும் பெண்ணுடைய சமூக மரியாதையை சீரழிப்பதை உள்நோக்கமாகக் கொண்டவை, அடுத்தடுத்த காரணங்களாக இருக்கின்றன. அடுத்த வருடம், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்தான கணக்கினை மட்டும் தனிப் பிரிவாகச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது.

சைபர் குற்றங்கள்பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை 5.5 சதவிகிதமும், பழங்குடிகளுக்கு எதிரான வன்முறை 4.7 சதவிகிதமும் அதிகரித்திருக்கின்றன. பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறையில் பெரும்பாலான வழக்குகள், பாலியல் வன்புணர்வு, சமூகத்தில் மரியாதையைச் சீரழித்தல், கொலை, ஆள்கடத்தல் என்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்பழங்குடிப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான வழக்குகள்  உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் வரையறை செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள். காவல்துறையின் கவனத்துக்கே வராமல் அல்லது புகார் அளிக்காமல்போன குற்றங்களின் எண்ணிக்கை இந்தக் கணக்கில் வராதது குறிப்பிடத்தக்கது, கவலைக்குரியது.