வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (01/03/2018)

கடைசி தொடர்பு:16:59 (26/03/2018)

அருகிவரும் தோல்பாவை - தொன்மக் கலைஞர் முத்து ராமோடு ஒரு நாள்

வறட்சிக் காலங்களில் மழை பொழிய வேண்டி கிராமங்களில் தோல்பாவைக் கூத்தை நடத்தும் வழக்கம் இன்றளவும் நம் கிராமங்களில் இருக்கிறது. தெருக்கூத்தை போல தோல் பாவைக் கூத்தும் நம் பாரம்பர்ய கலைகளில் ஒன்றாகும்.


தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளங்கள் எனப் பொழுது போக்கு வசதிகள் வளர்ந்துவிட்ட சூழலில் இந்தக் கலையும் இதை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கையும் நொடிந்துவிட்டது. 


இத்தகைய சூழலில் தனது வாழ்க்கையையே இந்தக் கலைக்காக அர்ப்பணித்துப் பல்வேறு ஊர்களுக்குப் பயணித்து தோல் பாவைக் கூத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் முத்து ராம். அவருடனான பயணத்தின் சில ஆச்சர்ய நிமிடங்களை இந்த போட்டோ ஸ்டோரியில் பார்க்கலாமா!? 

அதிகாலையில் ஆற்றங்கரைக் குளியலோடு தன் அன்றாட வாழ்க்கையை தொடங்கும் முத்து ராம்.

 


கண்ணாடிக் கண்களில் நடுநடுவே தெரியும் நரைமுடிகளை சீவும் பச்சை சீப்புகள். பாறைபோன்ற நெற்றியில் திருநீறு.

 

கற்பூர தீபத்தால் ஆராதனை செய்கிறார்.  

தன் வழக்கமான பூஜையை முடித்து விட்டு நண்பர் வருகையை கைபேசி மூலம் உறுதி செய்யும் முத்து ராம்

 

தேங்காய்ப் பத்தைகளைச் சீவு மனைவியுடன் சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்.

 

தோகைபோல் தரையில் விரிந்துகிடக்கும் ஆட்டுத்தோல். அதன் சிறு துண்டுப் பகுதை கத்தரிக்கோலால் வெட்டுகிறார்.

தோல் பாவைக்கான பொம்மைகளை தயாரிக்க ஆட்டுத் தோலை வடிவமைக்கும் முத்து ராம். 

 

நிழலைப் போல் இருக்கிறார். வெளிச்சத்தில் ஆஞ்சநேயர் சிலை.  

ஆஞ்சிநேயர் பாவையை தயார் செய்கிறார் 

 

சிறுவனின் பொம்மையைப் பார்க்கிறார். சிறுவனோ தன் தாத்தாவின் பொம்மையை உற்றுப்பார்க்கிறான். 

தன் பேரக் குழைந்தைகளோடு விளையாடிக்கொண்டே அன்றைய நிகழ்ச்சிக்கான பொருட்களை எடுத்து வைக்கிறார்.

 

பெட்டியைத்திறந்து திரைச்சீலையை மடித்து, பயத்திற்கு தயாராகிறார். 

சக கலைஞனோடு கூத்து நிகழ்த்த புறப்பட்டுச்செல்கிறார். தவில் வாசிப்பவர் (மதுரை அக்ரிக்கல்சர்

மதுரை விவசாயக் கல்லுரி நோக்கிய  பயணத்தினூடே சிறுதூக்கம் கொள்கிறார்.  

கொண்டுவந்த அனைத்து பொம்மைகளை உதவியாளனோடு எடுத்து வெளீயில்வைக்கிறார்.    

நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை கவனிக்கிறார்.

 

மாணவர்களின் ஆரவாரத்தோடு நிகழ்ச்சி நடத்துகிறார் முத்து ராம்.

 

மேடைக்கு வந்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுக் கொண்ட பொழுது.

 

 

மாணவர்கள் ரசிகர்களாகி செல்பி எடுத்துக்கொள்ளும் தருணம்.

 

 

இறுதியாய் மக்களுக்கு நன்றி தெரிவித்து அன்றைய பயணத்தை நிறைவு செய்யும் முத்து ராம் என்னும் மகத்தான கலைஞன்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்