வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (20/03/2018)

கடைசி தொடர்பு:20:11 (20/03/2018)

`சிவ வழிபாடு வீடுபேறு தரும்!’ - புனிதத் தலம் கூடல் சங்கமேஸ்வரர் ஆலயம் #VikatanPhotoStory

ர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்திலிருந்து கிழக்கே 13 கி.மீ தொலைவில் இருக்கிறது `கூடல் சங்கமம்’ எனும் இந்தப் புனிதத்தலம். 

கூடல் சங்கமம்

`கூடல்’ தமிழ்ச் சொல், `சங்கமம்’ சம்ஸ்கிருதச் சொல். தமிழும் சம்ஸ்கிருதமும் சேர்ந்து, `கூடல் சங்கமம்’ என்று இணைந்திருக்கும் பெயரைப்போலவே இங்கே கிருஷ்ணா நதியும், மலப்பிரபா நதியும் ஒன்றோடொன்று சங்கமித்துக்கொண்டிருக்கின்றன. 

மலப்பிரபா நதி, கிருஷ்ணா நதி சங்கமிக்கும் இடம்

இரு நதிகளும் சங்கமிக்குமிடத்தில் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் கூடல் சங்கமேஸ்வரர். 

 

கூடல் சங்கமேஸ்வரர் கோயில்

இங்கு உறையும் இறைவர், `சங்கமேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். 

சங்கமேஸ்வரர் கோயில் சாளுக்கிய கால கட்டுமானம்

இந்தத் திருக்கோயில் கி.பி 12-ம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் எழுப்பப்பட்டது. 

லிங்காயத், பசவண்ணா

கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தினருக்கு இந்தத் திருக்கோயில் மிக முக்கியமானது. ஏனென்றால், கர்நாடகாவில் `லிங்காயத்துகள்’ எனப்படும் சிவனை மட்டுமே வழிபடும் நெறியை உருவாக்கிய பசவண்ணாவின் ஜீவசமாதி இந்தத் திருக்கோயிலில்தான் இருக்கிறது. 

சங்மேஸ்வரர் கோயில்

தமிழகத்தில் 7-ம், 8-ம் நூற்றாண்டுகளில் அப்பரும் சுந்தரரும் சைவ சமயத்துக்குப் புத்துயிர் ஊட்டியதைப் போலவே கர்நாடகாவில் லிங்காயத்துக்குப் புத்துயிர் ஊட்டியவர் பசவண்ணா. இவர் `பசவா’, `பசவண்ணா’ என்றும் அழைக்கப்படுகிறார். சாளுக்கிய மன்னரிடம் அரசராகப் பணிபுரிந்தவர். 

சங்கமேஸ்வரர்

பசவண்ணா வகுத்த, `லிங்காயத்’ எனப்படும் சிவநெறி, சிவனை மட்டுமே கடவுளாகக் கருதியது. `சிவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே வீடுபேறடையலாம்’ என்பது இவரது நம்பிக்கை. 

சங்கமேஸ்வரர்

சாதிப் பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு, குழந்தைத் திருமணம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து, அவற்றைக் களைய முற்பட்ட பசவண்ணா விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் பருகுவதையும் கைவிட வேண்டுமென்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தார். 

சங்கமேஸ்வரர்

கர்நாடகாவில் 12-ம் நூற்றூண்டில் கடுமையான சமூகச் சீர்திருத்தத்தை மேற்கொண்டவர் பசவண்ணா. இவரைப் பின்பற்றுபவர்கள் `லிங்காயத்துகள்’ என அழைக்கப்படுகிறார்கள். 

சங்கமேஸ்வரர்

கூடல் சங்கமத்தில் சமாதிநிலையடைந்த பசவண்ணாவின் சமாதி இப்போது நீருக்கடியில் மூழ்கியிருக்கிறது. லிங்காயத்துகள், கூடல் சங்கமத்தை புனித இடமாக வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சங்கமேஸ்வரர்

கூடல் சங்கமேஸ்வரர் ஆலயம், சாளுக்கியர் கட்டடக்கலையில் அமைந்திருக்கிறது. 

சங்கமேஸ்வரர்

கூடல் சங்கமேஸ்வர ஆலயத்தின் சிறப்பு, இங்கு லிங்கத் திருமேனிக்குப் பதிலாக சிவனின் முகம் வடிக்கப்பட்டிருப்பதுதான். வழக்கத்துக்கு மாறாக மூலவருக்கு முன்பாக இரண்டு நந்தி அமைந்திருக்கின்றன. 

சங்கமேஸ்வரர்

லிங்காயத் நெறியை உருவாக்கிய பசவண்ணாவின் சிற்பமும் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது.

சங்கமேஸ்வரர்

கிருஷ்ணா நதியும் மலபிரபா நதியும் சங்கமிக்கும் இடத்தில் நாற்பதடி ஆழத்தில் அமைந்திருக்கும் சிவலிங்கம் இது. 

*** 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்