திருமஞ்சனம், எதிர்சேவை, தசாவதாரக் கோலம்… அழகரின் அழகு திருக்கோலக் காட்சிகள்! #VikatanPhotoStory | Madurai Chittirai Festival Kallazhagar 2018

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (29/04/2018)

கடைசி தொடர்பு:18:11 (29/04/2018)

திருமஞ்சனம், எதிர்சேவை, தசாவதாரக் கோலம்… அழகரின் அழகு திருக்கோலக் காட்சிகள்! #VikatanPhotoStory

திருமஞ்சனம், எதிர்சேவை, தசாவதாரக் கோலம்… அழகரின் அழகு திருக்கோலக் காட்சிகள்! #VikatanPhotoStory

மதுரைக்குச் சிறப்பு சித்திரைத் திருவிழா; சித்திரைத் திருவிழாவுக்குச் சிறப்பு கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம். 

மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்

கள்ளழகர் யார்? அவர் அழகர்மலையில் எழுந்தருள என்ன காரணம்? வைகையாற்றில் அவர் இறங்குவதன் பின்னணிதான் என்ன?

மதுரை கள்ளழகர்

மதுரை மாநகருக்கு வடக்கே  சுமார்  20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமாலிருஞ் சோலை. இது தற்போது 'அழகர்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்

இந்த மலை ரிஷப வடிவில் அழகுறக் காட்சியளிப்பதால் புராணங்கள் இதை, 'ரிஷபாத்ரி மலை’ என்றே அழைக்கின்றன. இலக்கியங்களும் புராணங்களும் போற்றிப் பாடும் மலை இது.

மதுரை கள்ளழகர்

யமதர்மராஜன் தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக ரிஷபாத்ரிக்கு வந்து அழகரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார்.

கள்ளழகர் வைகையில்

தன் தவத்துக்கு இரங்கி அழகிய வடிவில் காட்சி தந்த பெருமாள், அந்தத் தலத்திலேயே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டார். யமதர்மனின் பிரார்த்தனையின்படி பெருமாள் இந்தத் தலத்தில் கோயில் கொண்டார்.

மதுரை

சுந்தரராஜப் பெருமாளாக அழகிய வடிவில் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தி, பஞ்சாயுதபாணியாக கம்பீர வடிவில்  காட்சியளிக்கிறார். 

மதுரை அழகர்

பெருமாள், தன் கரத்தில் ஏந்தியிருக்கும் சக்கரம் பிரயோக நிலையில் காணப்படுகிறது. பக்தர்களைத் தாக்க வரும் தீய சக்திகளை ஒழிக்கவே பெருமாள் இப்படி அருள்பாலிக்கிறார். 

அழகர்

துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட சுதபஸ் என்ற முனிவர் மண்டூகமாக மாறிவிடுகிறார். அவரின் சாபத்தை நீக்கி அருள்புரிவதற்காகவே, ஆண்டுதோறும் கள்ளழகர் கோயிலைவிட்டு கிளம்பி மதுரையை நோக்கி வருகிறார். 

அழகர் உலா

ஆரம்பத்தில் அழகர் கோயிலில் இருந்து கிளம்பி ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக, பெருமாள் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் ஊரே அலங்காநல்லூராக மாறியதாக வரலாறு.

கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்

பத்து நாள் பயணமாக இந்த அழகர் உலா நடைபெறுகிறது. வளைந்த கொண்டை, குத்தீட்டி, கரத்தில் வலைத் தடி, இடையில் ஜமதாடு, காலில் பொற்சலங்கை எனக் குலுங்கக் குலுங்க வரும் அழகர், ஐநூறுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கியபடியே வருவார். 

கள்ளழகர்

தல்லாகுளத்தில் அழகருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அழகர் கோயிலில் இருந்து தலைச்சுமையாக கொண்டு வரப்படும் நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்படும். 

கள்ளழகர் சேவை

அதன் பிறகு மரப்பெட்டியில் இருக்கும் பல வண்ணப் பட்டாடைகளில் தலைமை குருக்கள் கையைவிட்டு எடுக்கும் வண்ணப் பட்டே அழகருக்கு உடுத்தப்படும்.

சேவை கள்ளழகர்

மதுரையில் ஆற்றில் இறங்கும் அழகரை, வீரராகவப் பெருமாள் எதிர்சேவை அளித்து அழைப்பார். அப்போது மாலை மாற்றி நட்பை பரிமாறிக்கொள்வார்கள். 

கள்ளழகர் எதிர்சேவை

அதன்பிறகு வண்டியூர் சென்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார். மண்டூக ஊர், மண்டூர் என மருவி பின்னர் வண்டியூர் என்றானதாகச் சொல்லப்படுகிறது.

எதிர்சேவை கள்ளழகர்

வண்டியூரில் ஏகாந்த சேவை, களைப்பு தீர சந்தன அபிஷேகம் என ஜொலிக்கும் அழகர், வண்டியூர் பெருமாளை வலம் வந்தபிறகு தேனூர் கிளம்புவார். 

கள்ளழகர் மதுரை வைகை

தேனூறில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். தேனூர் மண்டபத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் அடுத்து மதுரை ராமராயர் மண்டபத்தை அடைவார்.

மதுரை வைகை கள்ளழகர்

ராமராயர் மண்டபத்தில் அன்றிரவு முழுவதும் எழுந்தருளும் பெருமாள், யுகங்கள்தோறும் மக்களைக் காப்பாற்றுவதற்காக எடுத்த அவதாரங்களைக் குறிப்பிடும் வகையில் தசாவதாரக் கோலங்களில் காட்சி தருவார். நிறைவில் மோகினி அவதாரத்தில் உலா வருவார்.

கள்ளழகர் திருவிழா

மறுநாள் தல்லாகுளம் சேதுபதிராஜா மண்டபத்தில் சேவை சாதித்து பூப்பல்லக்கில் ஏறி அழகர் மலை நோக்கிக் கிளம்புவார். ஒன்பதாம் நாள் அழகர் கோயிலை அடையும் பெருமாளுக்கு மறுநாள் களைப்பு நீங்க உற்சவசாந்தி அபிஷேகம் செய்விக்கப்படும்.

திருவிழா கள்ளழகர்

பத்து நாள் அழகரின் பயணத்தை மதுரை வட்டாரமே கோலாகலமாகக் கொண்டாடும். ஆண்டுக்கொருமுறை நிகழும் அழகரின் பயணம் தெய்வமே மக்களை நோக்கி வரும் அற்புத அனுபவம் என்று மதுரை மக்கள் சிலிர்க்க சிலிர்க்கப் பேசுவார்கள்.
 

 

 


டிரெண்டிங் @ விகடன்