ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

சிறைவைக்கப்பட்ட இலங்கை அசோகவனத்திலேயே அம்மனாக அருள்பாலிக்கும் சீதை! #VikatanPhotoStory

சிறைவைக்கப்பட்ட இடத்திலேயே அம்மனாக அருள்பாலிக்கும் சீதை! #VikatanPhotoStory

சிறைவைக்கப்பட்ட இலங்கை அசோகவனத்திலேயே அம்மனாக அருள்பாலிக்கும் சீதை! #VikatanPhotoStory

ண்டகாருண்யத்திலிருந்து ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை, இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் அசோகவனம். அந்த இடம் இப்போது நுவரேலியா மாவட்டத்தில், `சீதஎலிய' என்ற பெயரில் அமைந்திருக்கிறது. `பத்தினி தெய்வம்’ என்று கொண்டாடி, சீதா சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள் பக்தர்கள். சீதாஎலிய கோயிலின் புகைப்பட உலா இங்கே...

சீதாஎலிய அம்மன் கோயில்

தனக்கு ஏற்பட்ட துயரம் வேறு யாருக்கும் வரக் கூடாது என்பதற்காக சீதையம்மனாக, இந்தக் கோயிலில் அருள்புரிகிறாள்.

சீதையம்மன் கோயில்

இது சீதா தேவிக்காக எழுப்பப்பட்டிருக்கும் தனித்துவமான கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

 

சீதை கோயில்

அசோக மரங்கள் சூழ்ந்த மலைச் சரிவில் அமைந்திருக்கிறது சீதாஎலிய கோயில்.

சீதை அருவி

கோயிலுக்கு அருகில் விழுந்துகொண்டிருக்கும் அருவிக்குப் பெயர் `சீதா அருவி.’ சீதா பிராட்டியின் சாபத்தின் காரணமாக இந்த இடத்தில் மட்டும் நீர் சுவையின்றி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அனுமன் கனையாழி
 

அனுமன் சீதா தேவியைக் கண்டபோது அவளை வணங்கி, தான் ராமனிடமிருந்து வந்திருக்கும் தூதுவன் என்பதற்கு அத்தாட்சியாக, கணையாழியைத் தரும் காட்சி
 

அனுமனின் பாதங்கள்

சீதா அருவிக் கரையில் காணப்படும் பள்ளங்கள், அனுமன் வானிலிருந்து குதித்தபோது அவரது பாதங்கள் பதிந்த இடம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனுமனின் பாதங்கள்

பாறையில் பதிந்த அனுமனின் பாதத்தை ஆடை போர்த்தி, மஞ்சள் வண்ணம் பூசி, விளக்கேற்றி பக்தர்கள் வழிபடும் காட்சி.

அனுமன் சந்நிதி

சீதா தேவியைத் தேடி கடல் தாண்டி, வனத்தைக் கடந்து சென்ற அனுமன், இந்தக் கோயிலில் தனிக் கருவறையில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
 

சீதா

பாறையில் விழுந்த சீதா அருவி அமைதியாகப் பாய்ந்துகொண்டிருக்க, அதன் கரையில் அசோகமரத்துக்கு அடியில் அனுமனும் சீதையம்மனும் அருள்புரியும் காட்சி.

ராமர் சந்நிதி

கோயில் கருவறையில் சீதா தேவி, ராமர் மற்றும் லட்சுமணனுடன் பக்தர்களுக்கு அருள்புரியும் காட்சி.

சீதை சந்நிதி

இதே கோயிலில் மற்றொரு கருவறையில் சீதா தேவியுடன் ராமர், லட்சுமணன் கையில் வில் அம்புகளுடன் அருள்புரியும் காட்சி.

விஷ்ணூ பகவான்

கருவறை விமானத்தில் விஷ்ணு பகவான் சங்கு சக்கரம் மற்றும் சுதர்சனச் சக்கரம் ஏந்தி, தேவி லட்சுமியுடன் அமர்ந்திருக்கும் அழகிய காட்சி. விமானம் முழுக்க அனுமனின் சிற்பங்கள் அனைத்துத் திசைகளிலும் காணப்படுகின்றன.

ராஜகோபுரம்

நரசிம்ம அவதாரம், கிருஷ்ணாவதாரம், ராமாவதாரக் காட்சிகள் ராஜகோபுரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும் காட்சி.


சீதையம்மன் கோயில்

கோயிலைத் தழுவியபடி மலையிலிருந்து கீழே விழும் சீதா அருவி. அருவியில் மலரை எய்து அது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டால் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்றும், அது கரை ஒதுங்கினால் நிறைவேறாது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.


சீதாஎலிய கோயில்

கோயில் விமானத்தைச் சுற்றிலும் விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்துத் திசைகளிலும் சிற்பங்களாகக் காணப்படும் எழில் மிகு காட்சி. சிறைவைக்கப்பட்ட இடத்திலேயே எழுந்தருளுகிறாள் சீதையம்மன். அவளை வணங்கி அவளது பேரருளைப் பெறுவோம்!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!