வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (05/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (07/07/2018)

குமரக்கோட்டம் முதல் தோரணமலை வரை... வாசகர்களுக்குப் பரவசம் தந்த சக்தி யாத்திரை!

குமரக்கோட்டம் முதல் தோரணமலை வரை... வாசகர்களுக்குப் பரவசம் தந்த சக்தி யாத்திரை!

29-06-18 அன்று அதிகாலை சக்தி விகடன், தன் வாசகர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த 'சக்தி யாத்திரை'க் குழு, ஆனந்த விகடன் அலுவலகத்தின் முகப்பில் அமைந்திருக்கும் ஆனந்த விநாயகரை வணங்கி அருள்பெற்ற காட்சி.

சக்தி யாத்திரைக் குழுவினர் 

விகடன் அலுவலகத்திலிருந்து சக்தி யாத்திரைக் குழுவினர் பேருந்தில் கிளம்புகிறார்கள். இடையூறு இல்லாமல் பயணம் தொடர வேண்டும் என்ற அக்கறையுடன், திருஷ்டி கழித்து யாத்திரை தொடங்கியது.

சக்தி யாத்திரை

29-06-18 அன்று காலை - பயணத்தின் முதல் கோயிலாக காஞ்சி குமரக்கோட்ட முருகனை, குவலயம் போற்றும் அழகனை கண்ணார தரிசித்து மகிழ்வுறும் சக்தி யாத்திரைக் குழுவினர்.

குமரக்கோட்ட முருகன் கோயில்

குமரக்கோட்டப் பெருமைகளையும், அங்கே கந்தபுராணம் அரங்கேறிய வரலாற்றையும் விவரிக்கும் 'திருப்புகழ்த் திலகம்' மதிவண்ணன். அதை மெய்சிலிர்க்கக் கேட்கும் சக்தி விகடன் வாசகர்கள். 

காஞ்சிபுரம் குமரக்கோட்டம்

29-06-18 அன்று மதியம் - ஞானமே வடிவான ஞானமலையின் முகப்புத் தோற்றம். அன்பர்களை வரவேற்று அருள்புரிந்த தபோவனர்களின் தாயக மலை இது.

ஞானமலை முருகன் கோயில் முகப்பு

ஞானமலை முருகப்பெருமானை சக்தி யாத்திரையில் பங்கேற்ற வாசகர்கள் வணங்கும் காட்சி. பிரம்ம சாஸ்தாவின் வடிவமாக நிற்கும் ஞான வடிவை வணங்கி அருள்பெற்ற பூரிப்பில் வாசகர்கள்.

ஞானமலை முருகன்

உலகெங்கும் வாழும் விகடன் வாசகர்கள் அனைத்து நலமும் வளமும் பெற்று சிறப்புற வாழ்ந்திட மேற்கொள்ளப்பட்ட 'வேல் மாறல் பாராயண பூஜை'யை வலையப்பேட்டை கிருஷ்ணன் நடத்தி வைத்தார்.

வேல் மாறல் பூஜை

'வெஞ்சமரில் அஞ்சேலென வேல் தோன்றும்!' என்ற வாசகத்துக்கு ஏற்ப எல்லா வல்வினைகளையும் நீக்கவல்ல முருகப்பெருமானின் கைவேலின் அழகுத் தோற்றம்.

வேல் மாறல் பூஜை ஞானமலை

30-06-18 அன்று காலை - தந்தைக்கு மந்திரம் உரைத்த தகப்பன் ஸ்வாமியாம் சிவகுருநாதனின் சுவாமிமலை திருக்கோயில் நுழைவு வாயில்.

சுவாமிமலை திருக்கோயில்

சுவாமிமலை முருகப்பெருமானின் சந்நிதிக்குச் செல்லும் படிக்கட்டில் யாத்திரைக் குழுவினர். முருகப்பெருமானின் அருகே அரை மணி நேரமாக அமர்ந்து தரிசித்த பூரிப்பில் வாசகர்கள்.

சக்தி விகடன் வாசகர்கள்

சுவாமிமலை தலத்தின் பெருமைகள் குறித்து உரையாற்றுகிறார் 'திருப்புகழ்த் திலகம்' மதிவண்ணன். குன்றுதோறாடும் குமரப்பெருமானின் பெருமைகளை விழிகள் விரியக் கேட்டு ரசிக்கும் அன்பர்கள்.

சக்தி விகடன் சுவாமிமலை

30-06-18 அன்று மாலை - குன்றக்குடி முருகப்பெருமான் ஆலயப் படிக்கட்டில் வாசகர்கள் குழாம். பின்னால் 'சொல்லின் செல்வன்' பி.என். பரசுராமன் மற்றும் 'திருப்புகழ்த் திலகம்' மதிவண்ணன்.

குன்றக்குடி முருகன் கோயில்

குன்றக்குடி ஆலய தரிசனத்துக்கு முன்னதாக தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் அளவளாவும் சக்தி விகடன் வாசகர்கள். 

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

விகடன் நிறுவனத்தையும், அதன் வாசகர்களையும் வாழ்த்தி, வந்த குழுவினரோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

குன்றக்குடி அடிகளார்

1-07-18 அன்று காலை - வள்ளியூர் முருகப்பெருமானின் ஆலயத்துக்கு முன்பாக வாசகர்களின் குழு. சென்ற இடமெல்லாம் சிறப்பான தரிசனத்தை பெற்ற மகிழ்வில் வள்ளியூரிலும் தரிசிக்கத் தயாராகும் காட்சி.

வள்ளியூர் முருகன் கோயில்

வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் அந்தத் தலத்தின் மகிமைகள் மற்றும் திருப்புகழ்ப் பெருமைகளை கேட்டு மகிழும் சக்தி விகடன் வாசகர்கள்.

வள்ளியூர் முருகன்

நாடும் வீடும் நலமாக வாழ பிரார்த்தனை செய்துகொண்டு, வள்ளியூர் முருகனை தரிசித்த நம் வாசகர்கள். செல்லுமிடமெல்லாம் 'நாங்கள் விகடன் வாசகர்கள்' என்றே தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் என்பதே நம் நிறுவனத்தின் பாரம்பர்யப் பெருமைக்கான அத்தாட்சி.

விகடன் வாசகர்கள்

1-07-18 அன்று மாலை - இயற்கை அழகோடு ஈசனின் மைந்தனான குமரப்பெருமான் குடிகொண்டிருக்கும் தோரணமலை மீது ஏறும் வாசகர்கள் குழு.

தோரணமலை முருகன் கோயில்

சித்தர்களுக்கெல்லாம் திருவருள் செய்து, குருபகவானாக நின்று, வைத்தியம் சொல்லிக் கொடுத்த தோரணமலை முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்களை மனம் குளிரக் குளிர தரிசிக்கும் சக்தி விகடன் வாசகர்கள்.

தோரணமலை முருகன்

`யாமிருக்க பயமேன்’ என்று சொன்ன முருகப்பெருமான் தயிரால் அபிஷேகிக்கப்படுகிறான். இந்த யாத்திரையில் கலந்துகொண்ட சகலரும், தொடர இருக்கும் சக்தி யாத்திரைகளில் கலந்துகொள்ளவிருக்கும் மற்ற வாசகர்களும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ விகடனும் வேண்டிக்கொண்டது. 

தோரணமலை முருகன் அபிஷேகம்

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே. 


டிரெண்டிங் @ விகடன்