வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/06/2017)

கடைசி தொடர்பு:19:09 (26/06/2017)

உலகப் புகழ்பெற்ற பண்ருட்டி முந்திரிப் பருப்பு - முந்திரிக்காடு டு சமையலறை! #PHOTOSTORY

vikatan photo story

ந்திய முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் ஊர் பண்ருட்டி. இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்கென்று தனிச் சுவை உண்டு. முந்திரிக்கு நிகராக இங்கு பலாவும் பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 28,500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரிக் காடுகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து சுமார் 22,168 மெட்ரிக் டன் முந்திரிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கு உற்பத்தியாகும் முந்திரிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறது முந்திரிப் பருப்பு.
 

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கி ஏப்ரல், மே மாதத்தில் அறுவடை முடிந்துவிடும். இந்த முந்திரிப் பருப்புகளை உடைத்துப் பதப்படுத்தி, தரம் பிரித்து ஏற்றுமதி செய்யவும், சார்புத் தொழிலாக முந்திரி எண்ணெய், புண்ணாக்குப் போன்றவற்றைத் தயாரிப்பதற்காகவும் பல நிறுவனங்கள் இங்கு இயங்கிவருகின்றன. இவற்றின் மூலம் இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 80% மக்கள் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பைப் பெற்றுவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்பகுதிப் பெண்களின் முக்கியமான குடிசைத் தொழிலாகவும் இருப்பது முந்திரிப் பருப்பைப் பதப்படுத்தும் தொழில்தான். ஆனால், முந்திரிக்கொட்டைகளில் இருந்து பருப்பைப் பிரித்தெடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் பால் நம்மீது பட்டால் அந்த இடம் வெந்துவிடும். நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம் அன்றாட உணவில் அங்கம் வகிக்கும் முந்திரிப் பருப்பு, தோட்டத்திலிருந்து எப்படி நம் சமையலறைக்கு வருகிறது என்பதைப் பார்க்கலாம்.

முந்திரி
 அறுவடை செய்யப்பட்டு வேக வைக்கப்பட்ட உடைக்கப்படாத முந்திரிக்கொட்டைகள்.

 

முந்திரிக்கொட்டையிலிருந்து உடைந்துவிடாமல் கைகளால் கவனமாகப் பிரித்தெடுக்கப்படுகின்றது

முந்திரி

பிரித்தெடுக்கப்பட்ட முந்திரிப் பருப்புகள்

முந்திரி

மேல் தோல் நீக்குவதற்காக இழுவை ட்ரே மூலம் இயந்திரத்துக்குள் செல்லும் பருப்புகள்

முந்திரிக்காடு டூ சமையலறை

மேல் தோல் நீக்கப்பட்டு வெளி வரும் பருப்புகள்

முந்திரிக்காடு டூ சமையலறை

இரண்டாவது முறை மேல் தோல் நீக்கப்படுகிறது

முந்திரிக்காடு டூ சமையலறை

இயந்திரங்களின் மூலம் பருப்புகளின் அளவை வைத்து தரம் பிரிக்கப்படுகின்றன

முந்திரிக்காடு டூ சமையலறை

தரம் பிரிக்கப்பட்ட பருப்புகள் டின்களில் அடைக்கப்படுகின்றன

உலகப் புகழ் பெற்ற பண்ருட்டி முந்திரிப் பருப்பு

மீண்டும் கைகளால் சலிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன

முந்திரிக்காடு டூ சமையலறை

பருப்புகள் அடைக்கப்பட்ட டின்கள் எடையின் மூலம் அளவு பார்க்கப்படுகின்றன

முந்திரிக்காடு டூ சமையலறை

டின்களுக்கு சீல் வைக்கப்படுகின்றன

முந்திரிக்காடு டூ சமையலறை

பிரின்ட் செய்யப்பட்ட டின்கள் அட்டைப் பெட்டிகளின் மூலம் பேக் செய்யப்படுகின்றன

முந்திரிக்காடு டூ சமையலறை

நம் சமையலறைக்கு வரத் தயாராகிவிட்டது பண்ருட்டி முந்திரிப் பருப்புகள்