வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (26/06/2017)

கடைசி தொடர்பு:19:17 (26/06/2017)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு எப்படி உருவாகிறது தெரியுமா!? #PHOTOSTORY

vikatan photo story

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனச் சொல்வார்கள். உப்பில்லாத எந்த உணவையும் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதல்லவா!? உப்பு வெறும் உணவுப்பொருளாக மட்டுமல்லாமல் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்றுதிரட்டிய வரலாற்று நிகழ்வுகளுக்கும் சாட்சி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்புக்கு வரி விதித்தபோது அந்த உத்தரவை எதிர்த்து உப்பு சத்யாகிரகத்தை முன்னெடுத்தார் மகாத்மா காந்தி. அந்த அறவழிப் போராட்டம் உப்புக்கான வரியை எதிர்ப்பதாக மட்டுமல்லாமல் பெருமளவிலான இந்தியர்களை ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்துக்கு ஒன்றுதிரட்டும் நிகழ்வாகவும் அமைந்தது. சரி, நிகழ்காலத்துக்கு வருவோம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்குப் பின் இருக்கும் மனித உழைப்பு குறித்து என்றாவது யோசித்துப் பார்த்திருப்போமா? நாம் தினம் நம் உணவில் கை வைக்க இந்தத் தொழிலாளிகள் சுட்டெரிக்கும் வெயிலில் உப்பளத்தில் உழைக்க வேண்டும். அவர்களின் உழைப்பைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

 

உப்பு உருவாகும் முறை
ஆழ் துளை கிணற்றிலிருந்து உப்பு நீரைச் சேகரிக்கும் பாத்திக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லும் வாய்க்கால் 

 

உப்பு உருவாகும் முறை

தொழிலாளி ஒருவர் வாய்க்காலிலிருந்து  வரும் தண்ணீரைத் திறந்துவிடுகிறார் 

 

உப்பு உருவாகும் முறை

வாய்க்காலில் இருந்து வந்த தண்ணீர் உப்புப் படிவங்களாக மாறிய பின் அதை அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் பலகை

 

உப்பு உருவாகும் முறை

உப்பு வாரும் பலகையை உப்பினை வாருவதற்காக எடுத்துச் செல்கிறார்

 

உப்பு உருவாகும் முறை

 

உப்பு உருவாகும் முறை

உப்புப் படிவங்களை உப்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரை சேர்க்கும் தொழிலாளி

 

உப்பளத்திலிருந்து வாரி கரைசேர்க்கப்பட்ட உப்புகளில் உள்ள அழுக்குகளைத் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் தொழிலாளி

 

உப்பு உருவாகும் முறை

கரை சேர்க்கப்பட்ட உப்பினை அள்ளும் பெண் 

 

உப்பு உருவாகும் முறை

அள்ளப்பட்ட உப்பைச் சுமை தூக்கும் பாத்திரத்தில் சக தொழிலாளிக்குத் தூக்கிவிடுகிறார்

 

உப்பு

உப்பளத்திலிருந்து உப்பினைத் தூக்கிக்கொண்டு வரும் தொழிலாளி

 

உப்பு உருவாகும் முறை

தூக்கிக் கொண்டு வந்த உப்பினை மலை போன்று குவிந்திருக்கும் உப்புக் குவியலலில் கொட்டும் பெண்

 

உப்பு

அள்ளி வந்து கொட்டப்பட்ட உப்பு சமன் செய்யப்படுகிறது

 

உப்பு

சமன்  செய்த பின்னர் அவற்றை ஓழுங்குபடுத்தும் வேலை

 

உப்பு

ஒழுங்குபடுத்தப்பட்ட உப்புக் குவியல் வெள்ளைப் பனிக்கட்டி மலைபோல் காட்சியளிக்கிறது

 

உப்பு

தூய்மை செய்யப்பட்ட உப்பினைத் தொழிலாளி தனது கைகளில் அள்ளிக் காட்டுகிறார்

உப்பு

தூய்மை செய்யப்பட்ட உப்பினைத் தொழிலாளி தனது கைகளில் அள்ளிக் காட்டுகிறார்

 

உப்பு உருவாகும் முறை

இத்தனை பேரின் உழைப்புக்குப் பின் நம் வீட்டுச் சமையலறைக்கு அனுப்ப கவர்களில் பேக் செய்யப்படுகிறது