உயிரைப் பணயம் வைத்து தீயை அணைக்கப் போராடும் வீரர்கள்! #VikatanPhotoStory

Firemen struggling to bring the flames under control

ரு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், அனிச்சையாக நாம் அழைப்பது தீயணைப்புத் துறையைத்தான். தீப்பற்றிய இடத்தைப் பற்றிய விவரத்தை 101 க்கு அழைத்து தெரிவித்தவுடன் நம் கடமை முடித்துவிட்டது என நினைத்து கடந்துவிடுவோம். ஆனால், அதன்பின் அங்கு விரைந்துவரும் தீயணைப்புத் துறை வீரர்களின் கட்டுப்பாட்டில் அந்த இடம் வந்துவிடும். தன் கொடிய நாக்குகளால் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வெறியாட்டம் போடும் தீக்கு முன் எந்த அச்சமும் இல்லாமல் தீயின் சீற்றத்தைத் தணிக்கும் பணி இவர்களுடையது. தீயைக் கண்டு எல்லோரும் அஞ்சி ஓடும் வேளையில், இவர்கள் தம் உயிரையும் பெருட்படுத்தாமல் தீயுடன் களமாடிக் கொண்டிப்பார்கள். குப்பைக் கிடங்கு பற்றி எரிந்தாலும் சரி, கோபுரங்கள் பற்றி எரிந்தாலும் சரி இவர்களுக்கு எல்லாமும் ஒன்றுதான். நேற்று, இரவு திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை கடுமையாகப் போராடி அணைத்த காட்சிகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு!

 தீயணைப்பு வீரர்கள்

வேகமாக தீப்பற்றி எரியும் இடத்தில் தீயணைப்பு வாகனம் 

 

தீ

கொழுந்துவிட்டு எரியும்  தீ

 

தீ

குப்பைக் கிடங்கில் தீ! அருகினில் நிற்கும் தீயணைப்பு வாகனம் 

தீயணைப்பு வீரர்கள்

மாநகராட்சி குடிநீர் வாகனமும் தீயணைப்பு  வாகனமும் இணைந்து செயல்படும் காட்சி

 

தீயணைப்பு வீரர்கள்

எரியும் குப்பைக் கிடங்கை வேடிக்கைப் பார்க்கும் பொதுமக்கள் 

 

தீயணைப்பு வீரர்கள்

தீப்பற்றிய இடத்தை மேற்பார்வையிடும் தீயணைப்பு வீரர்

 

தீயணைப்பு வீரர்கள்

குப்பைக் கிடங்கு 

 

தீயணைப்பு வீரர்கள்

தீ அணைப்பு வீரர்களுக்கு உதவியாக களமிறங்கிய இளைஞர்கள்

 

தீயணைப்பு வீரர்கள்

தீக்கு இரையான குப்பைக்கிடங்கும் காற்றில் கலக்கும் நச்சுப் புகையும்

 

 

 தீயணைப்பு வீரர்கள்

எரிமலையாய் அனல் கக்கும் தீ 

 

 தீயணைப்பு வீரர்கள்

தீயின் நடுவில் தீவிரமாய் செயலாற்றும் வீரர்கள் 

 

தீயணைப்பு வீரர்கள்

புகையுடன்  தீச்சுவாலை 

 

தீயணைப்பு வீரர்கள்

புல்டோஸர் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர போராடும் வீரர்கள்

 

தீயணைப்பு வீரர்கள் 

கொஞ்சம் கொஞ்சமாய் அணைக்கப்படுகிறது நெருப்பு.

 

தீயணைப்பு வீரர்கள் 

தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வீரர்கள்


தீயணைப்பு வீரர்கள்

தீயை அணைத்துவிட்டு திரும்பிச் செல்லும் வாகனம் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!